Share via:
பண மோசடி வழக்கில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யாவின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தற்போது ஐ.பி.எல். தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த லீக் போட்டிகளில் ராஜஸ்தான் அணி முதல் இடத்திலும், 2வது இடத்தில் கொல்கத்தாவும், 3வது இடத்தில் லக்னோ மற்றும் 4வது இடத்தில் சென்னை அணிகள் இடம்பெற்றுள்ளன. புள்ளிப்பட்டியலில் கடைசி அணியாக (8வது) மும்பை இடம்பெற்றுள்ளது கிரிக்கெட் ரசிகர்களை அதிருப்தியடைய செய்துள்ளது.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி குறித்தும் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா குறித்தும் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகளும் மீம்ஸ்களும் வைரலாகி வருகிறது. அந்த வகையில் ஹர்திக் பாண்ட்யாவின் குடும்பம் குறித்து தற்போது வெளியாகியுள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹர்திக் பாண்ட்யா, குர்ணால் பாண்ட்யா மற்றும் வளர்ப்பு சகோதரர் வைபவ் பாண்டியா ஆகிய மூவரும் இணைந்து நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளனர். இதில் வைபவ் பாண்டியா மற்ற இருவருக்கும் தெரியாமல் 1 கோடி ரூபாய் வரை தன்னுடைய வங்கிக் கணக்கில் மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தன்னுடய லாப விகித்தையும் அதிகரித்து பண மோசடியில் வைபவ் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.