Share via:
ஜனநாயகன் படத்துக்கு தடை போட்டுவிட்ட சென்சார் பராசக்திக்கு அனுமதி
கொடுத்தது. இந்த நிலையில், மோடி டெல்லிக்கு பராசக்தி குழுவினரை அழைத்து பாராட்டு விழாவுடன்
பொங்கல் கொண்டாடியிருப்பது எக்கச்சக்க கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து அதிமுக முக்கியப் புள்ளிகள், ‘’டெல்லியில்
பிரதமர் மோடியின் பொங்கல் விழாவில் பராசக்தி பட நடிகர்கள் கலந்து கொண்டது திமுக மீது
காட்டுவதையே காட்டுகிறது. அதாவது பாஜகவின் எதிரி காங்கிரஸ் மட்டுமே திமுக அல்ல என்பதையே
இந்த நிகழ்வு காட்டுகிறது.
பராசக்தி படம் கருணாநிதியை நினைவுபடுத்துவதாக திமுக குடும்பத்தால்
உருவாக்கப்பட்ட படம். 4 லட்சம் கோடி ஊழல் குற்றச்சாட்டு சமீபத்தில் எடப்பாடி பழனிசாமியால்
கவர்னரிடத்தில் கொடுக்கப்பட்டது, அதன் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
அண்ணாமலையும் திமுக ஃபைல்ஸ் வெளியிட்டார் அதன் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது ஒருபுறம் என்றால் மறுபுறம் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ்
ஜனநாயகன் படத்திற்கு ஆதரவு தெரிவித்து விஜய்க்கு ஆதரவாக களமிறங்குகிறார்கள். காங்கிரஸ்
விஜய்யோடும், பாஜக திமுகவோடும் இந்த சட்டமன்றத் தேர்தலுக்கு இல்லாவிட்டாலும் அடுத்த
நாடாளுமன்றத் தேர்தலுக்கு கூட்டணி உருவாக்குகிறார்களா? அப்படியென்றால் திமுகவும் பாஜக
பி டீம்தானா என்ற கேள்வி எழுகிறது.
மத்திய அரசால் இந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் செந்தில் பாலாஜியை
தவிர வேறு எந்த அமைச்சர்கள் மீதும் பெரிய அளவு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
திமுக இதுவரை பாஜக எதிர்ப்பு மற்றும் சித்தாந்த அரசியலை முன்னெடுத்தே தொடர் வெற்றிகள்
பெற்றுக் கொண்டு வந்ததிருக்கிறது, ஆனால் தற்போது பாஜகவோடு காட்டும் நெருக்கம் அந்த
பாஜக எதிர்ப்பு வாக்கு வங்கியை சிதைக்கும். எது எப்படி இருந்தாலும் அதிமுக தன் வலிமையை
பாஜகவிடம் இழந்துவிடாமல் இருக்க வேண்டும்,..’’ என்று அஞ்சுகிறார்கள்.
