Share via:
பாரதிய ஜனதா கட்சிக்கு கிடைத்திருக்கும் வெற்றி மகாராஷ்டிரா மக்கள்
கொடுத்திருக்கும் வெற்றி கிடையாது அதானியின் உதவியுடன் தான் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது
என உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார் என்றாலும், ராகுல்காந்தியின்
திட்டமிடல் தோல்வியே இதற்குக் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க, ஷிண்டே தலைமையிலான
சிவசேனா மற்றும் அஜித் பவாரின் என்.சி.பி ஆகியவற்றை உள்ளடக்கிய ஆளும் மகாயுதி கூட்டணி
மற்றும் காங்கிரஸ், சிவசேனா (யு.பி.டி) உள்ளிட்ட எதிர்க்கட்சி கூட்டணியான மஹா விகாஸ்
அகாதி (எம்.வி.ஏ) ஆகியவற்றுக்கு இடையே போட்டி நிலவியது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தமுள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கு
கடந்த 20 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 66.05 சதவீத வாக்குகள்
பதிவாகின. இந்த தேர்தலில் ஆளும் ‘மகாயுதி’ கூட்டணியில் பாஜக 149 தொகுதிகளிலும் முதல்வா்
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 81 தொகுதிகளிலும், துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான
தேசியவாத காங்கிரஸ் 59 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
எதிா்க்கட்சிகளின் ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணியில் காங்கிரஸ் 101 இடங்களிலும், உத்தவ்
தாக்ரே தலைமையிலான சிவசேனா 95 தொகுதிகளிலும், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ்
86 தொகுதிகளிலும் போட்டியிட்டனர். பகுஜன் சமாஜ் கட்சி 237 தொகுதிகளில் போட்டியிட்டது.
மீதம் உள்ள தொகுதிகளை அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸுக்கு 30 இடங்கள், ராஷ்டிரிய
ஜனதா தளம் (RJD)6 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட்)
4 தொகுதிகள் என வழங்கியது.
நாடு முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த தேர்தல் முடிவில் 200
இடங்களுக்கும் மேல் பாஜகவின் ‘மகாயுதி’ கூட்டணி முன்னணி வகித்து வருகிறது. பல இடங்களில்
பாஜக தொண்டர்கள் தற்போதே இனிப்புகளை வழங்கி வெற்றிக் கொண்டாட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் இங்கு இரண்டு பங்கு வெற்றி
பெற்ற இந்தியா கூட்டணி இந்த தேர்தலில் மோசமான தோல்வியைத் தழுவியிருக்கிறது. இப்போது,
வாக்குச்சீட்டுக்கு மாற வேண்டும். அல்லது விவிபிடியுடன் இவிஎம்மில் பதிவான வாக்குகளை
ஒப்பிட்டு எண்ண வேண்டும் என்று சிவசேனா கேட்பது அர்த்தமில்லாத தோல்வி பேச்சாகவே பார்க்கப்படுகிறது.
தோல்விக்குக் காரணத்தை ராகுல் கண்டறியவில்லை என்றால், தலைமைக்கு அர்த்தமின்றி போய்விடும்.
அதேநேரம், வெற்றி பெற்றாலும் பா.ஜ.க. கூட்டணிக்குள் யார் முதல்வர்
என்ற குழப்பம் வந்துள்ளது. கடந்த தேர்தலில் பாஜக சிவசேனா கூட்டணி ஆட்சி அமைத்தும்,
ஆட்சியில் செம பங்கு என பாஜக கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் சுழற்சி முறையில்
தங்களுக்கு முதல்வர் பதவி வேண்டும் என்று உத்தவ் தாக்கரே கேட்டு அதை தர மறுத்த பாஜக
சிவசேனாவை இரண்டாக உடைத்து நிலைமையை சரி செய்ய ஏக் நாத் ஷிண்டேவிற்கு முதல்வர் பதவியை
கொடுத்துவிட்டு துணை முதல்வர் பதவியை பட்னாவிஸ் ஏற்றார்.
இப்போது பா.ஜ.க பெரும்பான்மை பெற்று இருப்பதால் பெரும் கேள்விக்குறி
எழுந்துள்ளது.