News

விஜய்க்கும் சீமானுக்கும் டஃப் போட்டி.? உறுதியாகும் நான்குமுனைப் போட்டி

Follow Us

பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் புனித நீராடுகிறார். டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடியின் கும்பமேளா புனித நீராடல், தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகும் என இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். அதேபோல் இமயமலை தியானம், கன்னியாகுமரி தியானம், ராமர் கோயில் திறப்பு, புனிதநீராடல் என்று முழுக்க முழுக்க மதத் தலைவராக மோடி செயல்படுகிறார் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.

கும்பமேளாவை உலக அளவுக்கு விழாவாக காட்டுவதற்கு பிரயத்தனம் செய்துவரும் உ.பி. அரசு கும்பமேளா உயிரிழப்பு எண்ணிக்கையை ஏன் மறைக்கிறது, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் தருவதற்கு வழி இல்லையா என்று அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்நிலையில் முரசொலி இதழில் கும்பமேளாவில் 48 பேர் உயிர் இழந்துள்ள நிலையில் 30 பேர் என்று அரசு பொய் சொல்வது ஏன் என்று தி.மு.க. கேள்வி எழுப்பியிருக்கிறது.

அந்த முரசொலி தலையங்கத்தில், ‘உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற கும்பமேளாவில் 48 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அந்த மரணங்களைக் கூட மறைத்து தவறான கணக்கையும் காட்டி, .பி. அரசைக் ஒன்றிய பா.. அரசு காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.

ஜனவரி 29 ஆம் தேதி அதிகாலை 1 மணி முதல் 2 மணி வரையில் அகாரா மார்க் பகுதியில் பெருங்கூட்டம் அலை மோதியது. தடுப்புகளையும் தாண்டிக் குதித்து பலரும் உள்ளே நுழைந்திருக்கிறார்கள். கட்டுக்குள் அடங்காத நெரிசலில் மக்கள் சிக்கினார்கள். ஒருவர் இறந்தார், இருவர் காயம் என்பது மாதிரி தான் முதலில் செய்திகள் வெளியானது. அதன்பிறகு இறந்தவர் எண்ணிக்கை முப்பது ஆனது. செய்தி நிறுவனங்களுக்கு இதனை வெளியிடக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதனால் செய்தியை வெளியே விடாமல் வைத்திருந்தார்கள். ஒருவர் மரணத்துக்கே பிரேக்கிங் ஓலமிடும் மீடியாக்கள் 30 பேர் மரணத்துக்குப் பிறகும் மவுன மாகவே இருந்தன.

உத்தரப்பிரதேச மாநில அரசாங்கம் அறிவித்தது 30தான். ஆனால் உண்மையில் இறந்து போனவர்கள் 48 பேர் என்றுடைம்ஸ் ஆப் இந்தியாஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது. மருத்துவமனையில் இருந்து வெளியில் கொண்டு வரப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட உடல்களை எண்ணி, அந்த அடிப்படையில் 48 பேர் என்று அறிவித்துள்ளதுடைம்ஸ்

அதன்படி  உத்தரப்பிரதேசம் – 14,  பீகார் – 7,  மத்தியப்பிரதேசம் – 5, கர்நாடகா – 5,  மேற்கு வங்கம் – 4,  ராஜஸ்தான் – 3,  ஜார்கண்ட் – 2,  அசாம் – 1, உத்தரகாண்ட் – 1,  அரியானா – 1,  குஜராத் – 1 மற்றும் அடையாளம் காணப்படாதவர்கள் – 4  என்ற பட்டியலை பெயர், வயதுடன் வெளியிட்டுள்ளது. ஆனால் உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் யோகி அரசாங்கம் சொல்வது 30 தான். இந்த 30 பேரும் கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி இறக்கவில்லை, அவர்களுக்கு பல்வேறு நோய்கள் இருந்தது, அதனால் இறந்ததாக .பி.மாநில அதிகாரி விஜய் கிரண் ஆனந்த் சொல்லி இருக்கிறார்.

போக்குவரத்து தடைகள் ஏற்படுத்துவதற்கு முன்பே கும்பமேளாவில் குழப்பமான ஏற்பாடுகள் தான் பார்க்க முடிந்தது. பலமணி நேரம் நடக்க பக்தர்கள் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். ஜனவரி 27 ஆம் தேதி நிலைமை மிகவும் மோசமடைந்தது. வி..பி. வருகையைக் காரணம் காட்டி பல்வேறு தடுப்புகள் அதிகரிக்கப்பட்டது. ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக மேளா பூட்டப்பட்டது. உள் வழிகள் தடை செய்யப்பட்டு இருந்தன. இதனாலும் பக்தர்கள் பல மைல் தூரம் நடக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள். ராஞ்சியைச் சேர்ந்த 15 பேர், அலகாபாத் சந்திப்பில் இருந்து மேளா மைதானத்துக்கு 15 கிலோ மீட்டர் தூரம் தலையில் பொருட்களைச் சுமந்து கொண்டு நடந்து போனார்கள். பெண்களும், குழந்தைகளும் சிரமப்பட்டு நடந்து போனார்கள்.

மேளா நடக்கும் இடத்தில் வருவதும் போவதுமான பாதைகள் குழப்பம் ஏற்படுத்துவதாக இருந்தன. இதனால் ஆங்காங்கே தடியடி நடத்திக் கொண்டிருந்தது காவல் துறை. அனுமதிச் சீட்டு வைத்திருந்தவர்களையும் உள்ளே விடவில்லை. திடீரென அங்குள்ள சிறுவியாபாரிகளின் கடைகளை எடுக்கச் சொன்னார்கள். அதனாலும் குழப்பம் வந்தது. திடீரென்று வி..பி. பாதையை மாற்றினார்கள். இதனால் பக்தர்களின் பாதைகளில் குழப்பம் ஏற்பட்டது. கூட்டமும் அதிகம் ஆனது. முறையான முன்கூட்டியே திட்டமிடுதல் இல்லாததுதான் இதற்குக் காரணம்என்றுதி வயர்பத்திரிக்கையின் நிருபர் தான் நேரடியாக பார்த்த காட்சிகளை எழுதி இருக்கிறார்.

இதைப் பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்கக் கூட எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. பா... செய்தால், யோகிகள் ஆண்டால் எதையும் கேள்வி கேட்கக் கூடாது என்பதுதான் சங்கிகள் சட்டம்’’ என்று கடுமையாக சாடியுள்ளது. பதில் சொல்லுங்க யோகிஜி.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link