Share via:
மோடி கண்ணுல விரல் விட்டு ஆட்டுறாங்கப்பா…
முழுமையான தேர்தல் முடிவுகள் இன்னமும் வரவில்லை என்றாலும் பிரதமர்
நரேந்திர மோடி இதுவரை நடைபெற்ற மூன்று சுற்றுகளிலும் தொடர்ந்து பின்னடைவு சந்தித்திருக்கிறார்
என்பது மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்திருக்கிறார்.
வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராஜ்க்கும் பிரதமர்
மோடிக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் தொடர்ந்து சரிவிலேயே இருக்கிறது. ஐந்தாவது
சுற்று முடிவில் இரண்டாயிடம் வாக்குகள் வித்தியாசத்தில் மோடி பின்னடைவில் இருக்கிறார்.
கடந்த 2014, 2019 ஆகிய தொகுதிகளில் நரேந்திர மோடி இந்த தொகுதிகளில்
நான்கு லட்சம் மற்றும் ஐந்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது
குறிப்பிடத்தக்கது.
பா.ஜ.க. மிகவும் வலிமையாக காணப்படும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில்
பா.ஜ.க.வுக்கு ஒட்டுமொத்த பின்னடைவு ஏற்படுவதாகத் தெரிகிறது. ஆகவே, பா.ஜ.க.வுக்கும்
காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான வித்தியாசம் குறைந்துகொண்டே இருக்கிறது.
பா.ஜ.க. 302 என்ற எண்ணிக்கை 290 ஆக குறைந்திருக்கிறது. 190ல் தொடங்கிய
காங்கிரஸ் கட்சி 215 என்று அதிகரித்து வருகிறது. இந்த வித்தியாசம் மாற்றம் அடையலாம்
என்றாலும் பா.ஜ.க.வின் அடித்தளம் ஆடிப்போயிருக்கிறது என்பது மட்டும் உண்மை.