Share via:
– ஆர்.எஸ்.எஸ்.
சீக்ரெட் கணக்கு
அசுர பலத்துடன் ஆட்சியில் மூன்றாவது முறையாக அமர்ந்து பல்வேறு
அதிரடி முடிவுகள் எடுக்கும் திட்டத்தில் இருந்த ஆர்.எஸ்.எஸ்.க்கு கூட்டணி ஆட்சி என்பது
மிகப்பெரும் அதிர்ச்சி. அதனால் இப்போதைக்கு மோடியை பிரதமர் பதவியில் அமர வைத்தாலும்
விரைவில் அதிரடி ஆட்டம் ஆடுவதற்கு கணக்கு போடுவதாக சொல்லப்படுகிறது.
மூன்றாவது முறையாக பிரதமர் நாற்காலியில் அமர இருக்கும் மோடி பிரமாண்டமான
ரோடு ஷோவை தவிர்த்துவிட்டு வெற்றி விழா கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அவர்,
‘’மக்களவைத் தேர்தலில் 64 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வாக்களித்து புதிய சாதனை படைத்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மக்கள் பெருந்திரளாக வாக்களித்து உலகத்துக்கு உண்மை நிலவரத்தை உணர்த்தி
உள்ளனர். இந்த நேரத்தில் மக்களவைத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்த தேர்தல் ஆணையத்துக்கு
நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3-வது
முறை ஆட்சி அமைப்பதற்காக மக்கள் தீர்ப்பளித்து உள்ளனர். இது, அரசமைப்பு சாசனத்தின்
மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை உணர்த்துகிறது. பாஜக மற்றும் தேசிய ஜனநாயக
கூட்டணி மீது மக்கள் அபார நம்பிக்கை வைத்திருப்பது மீண்டும் உறுதியாகி உள்ளது. பாஜக
கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு மனதார நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த 1962-ம் ஆண்டுக்குப் பிறகு மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி
தொடர்ச்சியாக 3வது முறையாக பதவியேற்க உள்ளது. இது வரலாற்று சாதனை ஆகும். ஆந்திரா, அருணாச்சல
பிரதேசம், ஒடிசா, சிக்கிமில் காங்கிரஸ் கட்சி முழுமையாக தோற்கடிக்கப்பட்டு உள்ளது.
ஒடிசாவில் முதல்முறையாக பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய
வெற்றி.
கேரளாவில் கால் ஊன்ற பாஜக நீண்ட காலமாக முயற்சி செய்து வருகிறது.
இதற்காக பாஜக தொண்டர்கள் பல்வேறு தியாகங்களை செய்துள்ளனர். இதன் பலனாக கேரளாவின் திருச்சூர்
மக்களவைத் தொகுதியில் பாஜக அபார வெற்றி பெற்றிருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியின்
3வது ஆட்சியில் மிகப்பெரிய முடிவுகள் எடுக்கப்படும்’’ என்று கூறியிருக்கிறார்.
ஆனால், பாஜகவை இயக்கிவரும் ஆர்.எஸ்.எஸ். இந்த எண்ணிக்கையில் கடும்
அதிருப்தியில் உள்ளது. மோடியினாலே இத்தனை பெரிய தோல்வி என்பதால் ஆறு மாதத்தில் புதிய
பிரதமர் நியமிக்கப்படுவது குறித்து ஆலோசனை நடத்துகிறது. . இது மோடியின் உத்தரவாதம்.
உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை மாற்ற அதிதீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.
பாதுகாப்பு துறை உற்பத்தியில் தன்னிறைவை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பிரதமர்
நரேந்திர மோடி பேசினார்.
தட்டுத்தடுமாறி ஆட்சியில் அமர்கிறது என்றாலும், ஆர்.எஸ்.எஸ். மோடியின்
நடவடிக்கையில் திருப்தியாக இல்லை. அமலாக்கத்துறை, சி.பி.ஐ., நீதிமன்றம், வருமான வரித்துறை
தேர்தல் கமிஷன் ஆகிய அத்தனை துறைகளும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக இருந்தும் தனிப்பெரும்பான்மையை
சாதிக்க முடியவில்லை.
ஜார்கண்ட் முதலமைச்சர், டெல்லி முதலமைச்சர், செந்தில் பாலாஜி போன்ற
பலபேரை சிறையில் அடைத்து மிரட்டியும் கூட்டணியை உடைக்க முடியவில்லை. மிக முக்கியமாக
உத்தரப்பிரதேசத்தில் கட்சி தோற்றுப் போயிருக்கிறது. ஆகவே, இனிமேலும் மோடி என்ற பிம்பம்
எடுபடாது என்பதை ஆர்.எஸ்.எஸ். உணர்ந்துவிட்டது. அடுத்து டெல்லி, உத்தரப்பிரதேசத்தில்
சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்குள் ஒரு புதிய பிரதமர் பற்றிய அறிவிப்பு
வெளியாகும். மோடியே முன்வந்து அவரை பதவியில் அமர வைப்பார்கள் என்றும் சொல்கிறார்கள்.
வெற்றி கிடைத்தும் அதை கொண்டாட முடியாத மனநிலையில் பா.ஜ.க.வினர்
தவிக்கிறார்கள் என்பது நிஜம்.