Share via:
பிரதமர் மோடி மேடைகளில் பேசும்போது, ‘ஒரே ஒரு ஊழலைக் கூட அனுமதிக்க மாட்டேன். நாட்டின் மக்களின் பணத்தைக் கொள்ளையடித்தவர்களின் அத்தனை சொத்துக்களையும் அரசு கஜானாவிற்குக் கொண்டு வருவேன். வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பவர்களின் அத்தனை பணத்தையும் இந்தியாவுக்குக் கொண்டுவந்து அத்தனை மக்களுக்கும் 15 லட்சம் ரூபாய் பிரித்துக் கொடுப்பேன்’ என்று பேசினார்.
மோடியின் பேச்சில் மயங்கியே மக்கள் அவருக்கு ஓட்டுப் போட்டார்கள். நேரு நாட்டையே கெடுத்து வைத்திருக்கிறார். அதனால், மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுங்கள். அத்தனை ஊழல்வாதிகளையும் பிடித்துக் கொண்டுவருகிறேன்’ என்று சொன்னார். மக்கள் அதையும் நம்பி ஓட்டுப் போட்டார்கள்.
‘இந்தியாவை வல்லரசாக மாற்றிக் காட்டுகிறேன். ஓட்டுப் போடுங்கள்’ என்று மீண்டும் வாக்கு கேட்டார். மக்கள் மீண்டும் ஓட்டு போட்டார்கள். இப்போது அவர் செய்யும் சம்பவங்கள் எல்லாம் தரமாகவே இருக்கிறது. எப்போதும் போல் அம்பானி, அதானி போன்ற பணக்காரர்களுக்காகவே ஆட்சி நடத்துகிறார். செமி அமைப்பின் தலைவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி கிண்டன்பர்க் அறிக்கை வெளியானது. அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்போது இன்ஃபோசிஸ் நிறுவனம் 32 ஆயிரம் கோடி வரி பாக்கி வைத்திருப்பது அம்பலமாகியிருக்கிறது. இது குறித்தும் மோடி எதுவும் பேசவே இல்லை.
ஏனென்றால், இந்த அரசாங்கத்தை கோடீஸ்வரர்களும், கார்ப்பரேட் நிறுவனங்களுமே நடத்திவருகின்றன என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டுவதே நடந்துவருகிறாது.
வாய்ச் சொல்லில் வீரரடி என்று பாரதியார் பாடியது மோடியைத் தான் போலிருக்கிறது.