Share via:
திருப்பரங்குன்றம் விவகாரத்தை வைத்து 2026 தேர்தலை பாஜக எதிர்கொள்ள
இருப்பது ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர வைத்துள்ளது. இதையடுத்தே திருப்பரங்குன்றத்துக்கு
பிரதமர் மோடியை வரவழைப்பதற்கு திட்டமிடப்படுகிறது. அதோடு, திருப்பரங்குன்றம் தொகுதியை
தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென மீண்டும் எடப்பாடி பழனிச்சாமியிடம் வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் தமிழக தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மத்திய உள்துறை
அமைச்சர் அமித்ஷா. சென்னையில் தனி வீடு அமித்ஷா தங்குவதற்கான வேலைகள் நடப்பதாக சொல்லப்படுகிறது.
பிரதமர் மோடி, அமித்ஷா போலவே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் தீவிரம்
காட்டத் தொடங்கியிருக்கிறார். 13 திமுக அமைச்சர்கள், மூன்று முக்கிய எம்பிக்கள் மீதான
ஊழல் புகார்கள் குறி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டாஸ்மாக் தொடர்பான இடங்களில் நடந்த அமலாக்க துறை சோதனையில் துணை
முதல்வர் உதயநிதி நெருங்கிய நண்பர்கள் சிக்கி இருக்கும் நிலையில் உச்ச நீதிமன்றம் கொடுத்த
தடை உத்தரவால் இந்த விவகாரத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்வதற்கு சிக்கலாக அமலாக்க
துறைக்கு இருந்து வருகிறது,
தற்சமயம் திமுகவுக்கு எதிராக அரசியல் பதிலடி மட்டுமே கொடுக்கப்பட்டு
வருகிறது, இனி வரும் காலங்களில் பாஜக தரப்பில் இருந்து கொடுக்கும் தாக்குதலுக்கு திமுக
பதிலடி கொடுக்க முடியாதபடி திணறடிக்கும் விதமாக நேரடி தாக்குதல் இருக்க வேண்டும் என்பதும்
அமித்ஷாவின் திட்டங்களின் ஒன்றாக உள்ளது.
சென்னையில் அமித் ஷாவுக்கு என ஸ்பெஷல் வார் ரூம் ஏற்பாடுகள் நடத்து
வரும் நிலையில், வாரத்தில் இரண்டு நாட்கள் சென்னையில் தங்கி நேரடியாக திமுக அட்டாக்கை
தொடங்க இருக்கிறாராம்.
ஆனால் திமுகவினரோ, ‘அமித்ஷா மட்டுமின்றி மோடி வந்து தங்கினாலும்
தமிழகத்தில் தாமரை மலரவே மலராது’ என்கிறார்கள்.