Share via:
தென் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருநெல்வேலியில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சந்தித்து உரையாடினார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். மேலும் மகளிர் சுய உதவிக்குழுவினரால் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்களையும் அமைச்சர் உதயநிதி பார்வையிட்டு அவர்களை ஊக்கப்படுத்தினார்.
இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மகளிரை தொழில் முனைவோர் ஆக்கிடும் வகையில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பயனாக, மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த சகோதரிகள், மக்களுக்குப் பயனுள்ள பல்வேறு பொருட்களைத் தயாரித்து சந்தைப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், திருநெல்வேலியில் மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த சகோதரிகள் தயார் செய்த பொருட்களை இன்று நேரில் பார்வையிட்டு அதன் பயன்பாட்டைக் கேட்டறிந்தோம்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உருவத்துடன் கூடிய பத்தமடை பாய், – கூடை மற்றும் அலங்காரப் பொருட்களைத் தயாரித்த மகளிர் சுய உதவிக்குழுக்களின் சகோதரிகளை வாழ்த்தினோம் என்று தெரிவித்துள்ளார்.