Share via:
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தற்போது மேலும் ஒரு பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சைதாப்பேட்டையில் இன்று தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்காமல் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்துள்ளார்.
ஏற்கனவே நடைபெற்ற மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி,தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று பகிரங்கமாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். அதன் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்காமல் அமைச்சர் பொன்முடி புறக்கணித்து இருப்பது, தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையிலான மோதலை அதிகரித்துள்ளது வெளிப்படையாக தெரிகிறது.
விடுதலைப் போராட்ட வீரர் சங்கரையாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் இருப்பதும், பட்டமளிப்பு விழாக்களில் பேச அனுமதி அளிப்பதில்லை என்றும் அமைச்சர் பொன்முடி, பட்டமளிப்பு விழாக்களை தொடர்ச்சியாக புறக்கணித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.