News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

திருச்சி பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்ட விவகாரத்தில் அமைச்சர் நேரு செய்திருக்கும் கோல்மால்களை எடப்பாடி பழனிசாமி அம்பலப்படுத்தியிருக்கிறார். நேற்று திருச்சி புதூர் பிஷப் சாலையில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி எழுச்சியுரையாற்றினார்.

அப்போது அவர், அமைச்சர் நேரு  இந்த தொகுதியின் எம்.எல்...  தமிழ்நாட்டில் இவருடைய இலாகாவில்தான் நிறைய பிரச்னைகள். சொத்துவரி ஏற்றிவிட்டனர்குடிநீர் வரி, வீட்டு வரி, கடை வரி என எல்லா வரிகளையும் 100% முதல் 150% வரை உயர்த்திவிட்டனர். போதாக்குறைக்கு குப்பைக்கும் வரி போட்ட ஒரே அரசு திமுக அரசுதான்.

திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் விவசாயிகளுக்குத் துன்பம் விளைவிக்கும் திட்டத்தைதான் கொண்டுவருகிறார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் 20 கிணறுகளுக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள். சியா கமிட்டி அனுமதி அளித்துள்ளது. ஆனால் அமைச்சர் எங்களுக்குத் தெரியாது என்கிறார், தெரியாமல் அரசாங்கம் நடக்குமா? இது சென்சிடிவான பிரச்னை.

ஏற்கனவே டெல்டாவில் மீத்தேன் எடுக்க ஒப்பந்தம் போட்ட அரசு திமுக அரசு. டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அதனைத் தடுத்து நிறுத்தியது அதிமுக அரசு. இப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்வதாகச் சொல்லியிருக்கிறார்கள், ரத்து செய்வதற்கு அதிகாரம் இருக்கிறது என்றால், அனுமதி கொடுப்பதற்கும் அதிகாரம் இருக்கத்தானே செய்யும். இந்த அரசுக்குத் தெரிந்துதான் அனுமதி கொடுத்திருக்கிறது, இது விவசாயிகளின் விரோத அரசு.

திருச்சி மாவட்டம் உறையூர் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் எத்தனையோ முறை சொல்லிவிட்டனர். உடல் உபாதை ஏற்படுகிறது என்று சொல்லியும் யாரும் கண்டுகொள்ளவில்லை. கழிவுநீர் கலந்த குடிநீர் பருகியதால் 3 இறந்திருக்கிறார்கள், 50 பேர் சிகிச்சை பெறுகின்றனர். அமைச்சர் நேருவின் துறையில்தான் இது வருகிறது. இப்படிப்பட்ட அவல ஆட்சி தொடர வேண்டுமா?

திருச்சியில் பல நிலங்கள் அமைச்சர் துணையோடு அபகரிக்கப்பட்டதாக கடிதம் கொடுத்திருக்கிறார்கள். திருச்சி பேருந்து நிலையம் புதிதாகக் கட்டியிருக்கிறார்கள், அதற்கு அருகில் இருப்பது யாருடைய நிலம் என்றால், அமைச்சர் நேருவுடையது. 300 ஏக்கர் நிலம் உள்ளது. ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கு 500 ஏக்கர் இருக்கிறது. ஜி ஸ்கொயர் திமுகவின் பினாமியாக இருப்பதாகத் தகவல். நேருவுடைய நிலத்துக்கு மதிப்பு உயர வேண்டும் என்பதற்காக அங்கு பேருந்து நிலையம் கட்டியிருக்கிறார்கள்.

சிதம்பரம் செட்டியார் அன்னதான டிரஸ்ட் 17 ஏக்கரில் நேருவுக்கு சம்மந்தப்பட்டவர்கள் நிலத்தை மிரட்டி வாங்கியதாகப் பேசப்படுகிறது. சட்டரீதியாக இதில் தவறு இருந்தால் அதிமுக ஆட்சி அமைந்ததும் சொத்து மீட்டெடுக்கப்படும். ஸ்ரீரங்கம் குழந்தை முதலியார் தோட்டம் பகுதியில் 18 ஏக்கர் கோயில் நிலத்தை முறைகேடாக ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜி ஸ்கொயர் பதிவுசெய்திருப்பதாக புகார் மனு கொடுத்திருக்கிறார்கள், அதிமுக அரசு அமைந்ததும் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். மீண்டும் உரியவரிடம் நிலம் ஒப்படைக்கப்படும்…’’ என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

இதுவரை நேரு இதற்கு வாய் திறக்கவே இல்லை.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link