Share via:
அடுத்த 2 மாதங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் நடைபெற்ற ஹெல்த் வாக் சாலை ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், வருகிற நவம்பர் மாதம் 4ம் தேதி 38 மாவட்டங்களில் 8 கி.மீட்டர் தூரம் கொண்ட ஹெல்த் வாக் சாலை திட்டம் தொடங்கப்பட உள்ளது என்று தெரிவித்தார். இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை பெசன்ட் நகரில் தொடங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நடைபயிற்சி மேற்கொள்பவர்களின் வசதிக்காக அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரை பெசன்ட் நகர் அவென்யு பகுதி சாலைகளில் கனரக வாகனங்கள் வந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை சுகாதாரத்துறையின் சார்பில் நடைபெற உள்ள ஹெல்த் வாக்கின் போது மருத்துவ முகாமும் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
டெங்கு குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது, ‘‘கடந்த 10 மாதங்களில் 5,600 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்ட நிலையில் 5 பேர் இறந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் வருகிற நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.