Share via:
0
Shares
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்ஆகிய 4 மாவட்டங்களை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் பேரிடர் பணிகளுக்காக பல்வேறு தரப்பினர் முதலமைச்சரின் பொது நிவாரணநிதிக்கு உதவித் தொகை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று (டிச.15) தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சந்தித்தார். அப்போது மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரண பணிகளுக்காக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பணியாளர்களின் ஒருநாள் சம்பளத் தொகையான ரூ.1.01 கோடிக்கான காசோலையை வழங்கினார். இந்த சந்திப்பின் போது முதன்மை செயலாளர் அபூர்வா, வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.
Tagged latest