Share via:
மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரண பணிகளுக்காக சன் குழுமத் தலைவர் கலாநிதிமாறன் ரூ.5 கோடிக்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக வழங்கினார்.
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த (டிசம்பர்) 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. வரலாறு காணாத இம்மழையால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து மத்திய அரசு உரிய உதவிகளை வழங்கும் என்று தெரிவித்த நிலையில் ரூ.450 கோடி ஒதுக்குவதாக தெரிவித்தது.
அதைத்தொடர்ந்து மத்திய ஆய்வுக்குழு சென்னை வருகை தந்து நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்களில் 2 பிரிவுகளாக பிரிந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளது.
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று (டிச.11) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த சன் குழுமத்தின் தலைவர் மற்றும் வேளாண்மை இயக்குனரான கலாநிதிமாறன், மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடிக்கான காசோலையை வழங்கினார். இந்த சந்திப்பின் போது சன் குழுமத்தின் செயல் இயக்குனர் காவேரி கலாநிதிமாறன் உடன் இருந்தார்.