Share via:
மிக்ஜாம் புயல் பேரிடரால் பாதிக்கப்பட்ட விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் பாதிக்கப்பட்ட 5 ஆயிரம் குடும்பங்களுக்கு தி.மு.க. துணை பொது செயலாளர் கனிமொழி எம்.பி. நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த (டிசம்பர்) 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் அதிகனமழை பொழிந்தது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. பொது மக்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் வீட்டு உபயோகப் பொருட்கள், சான்றிதழ்கள், புத்தகங்கள் உள்ளிட்டவை நாசமானது.
இந்நிலையில் விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி கே.கே.நகரில், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி, மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 5,000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரராஜா, தி.மு.க. மாநில மகளிரணி சமூக வலைதள பொறுப்பாளர் ரத்னா லோகேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.