Share via:
இப்போது மனிதர்கள் அனைவருமே செல்போனுக்கும் தொழில்நுட்பத்திற்கும் முழு அடிமையாக மாறியிருக்கிறார்கள் என்பதை சுட்டிக் காட்டி எச்சரிக்கை செய்திருக்கிறது, மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினை.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ‘கிரவுட்ஸ்டிரைக்கின்’ ஒரு அப்டேட்டில் ஏற்பட்ட குளறுபடி அந்த நிறுவனத்தின் சர்வர் திடீரென முடங்கியது. இதனால், உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் சேவைகளைப் பயன்படுத்தும் அத்தனை நிறுவனங்களின் செயல்பாடுகள் முற்றிலுமாக முடங்கின.
பல்லாயிரக்கணக்கான நிறுவனங்கள், தனிநபர்கள் பயன்படுத்தும் மைக்ரோசாப்ட் மென்பொருளில் இயங்கும் கணினி, லேப்டாப் செயலிழந்துள்ளது. உலகம் முழுவதும் வர்த்தகம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் விமான சேவைகள் முடங்கியுள்ளன.
இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது நமது வங்கிச் செயல்பாடு, நமது தனிப்பட்ட சோஷியல் மீடியா கணக்குகள், தனிப்பட்ட தகவல்கள் எல்லாம் பாதுகாப்பாக இருக்கிறதா என்ற அச்சம் ஏற்படுகிறது. ஒரு நிறுவனத்தின் குளறுபடி ஒட்டுமொத்த உலகத்தையும் தடுத்து நிறுத்த முடியும் என்றால், எத்தகைய மோசமான தொழில்நுட்ப அடிமையாக மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது.
இது, ஆபத்தான அறிகுறி. இனியாவது மனிதர்கள் விழித்துக்கொள்ள வேண்டும்.