News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தென் தமிழக மக்கள் வெள்ளத்தில் இருந்து இன்னமும் முழுமையாக மீளவில்லை என்பதால் என்னுடைய பிறந்த நாளை யாரும் கொண்டாட வேண்டாம் என்று கனிமொழி எம்.பி. அறிவிப்பு வெளியிட்டிருந்தாலும், மற்ற ஆண்டுகளைவிட இந்த ஆண்டு அவரது பிறந்த நாளை ஆதரவாளர்கள் வழக்கத்தைவிட அதிகமாக கொண்டாடி வருகிறார்கள்.

இந்த நாளில் சின்னப் பிள்ளையாக எம்.ஜி.ஆர். மடியில் கனிமொழி அமர்ந்திருக்கும் படத்தை வெளியிட்டு பாராட்டி வருகிறார்கள். இந்த படம் அ.தி.மு.க.வினர் மத்தியிலும் பரபரப்பாக பரப்பப்பட்டு வருகிறது.

தென் தமிழகத்தில் மழை தொடங்கிய நேரம் முதல் இன்று வரையிலும் தொடர்ச்சியாக நலத்திட்ட உதவிகளில் கவனம் செலுத்திய கனிமொழியை, தி.மு.க. ஐ.டி. விங் இன்றைய தினத்திலும் புறக்கணித்து அமைதி காத்துவருகிறது.

நேற்றைய தினம் பிரதமர் மோடியையும் ராகுல் காந்தியையும் உதயநிதி சந்தித்துப் பேசியதை மீண்டும் மீண்டும் பரப்பிவரும் தி.மு.க. ஐ.டி. விங் கனிமொழிக்கு புரமோசன் கொடுக்கவில்லை என்று தி.மு.க.வினரே வருத்தம் அடைகிறார்கள்.

உதயநிதி துணை முதல்வராக வரும் வரையிலும் கனிமொழிக்கு எந்த புரமோஷனும் தரவே மாட்டார்கள் என்று தி.மு.க.வினரே ஒப்புதல் வாக்குமூலமும் தருகிறார்கள். சரிதான், போட்டி வந்துடக்கூடாதுன்னு நினைக்கிறாங்களோ…

இந்த படத்தில் கனிமொழியுடன் கலாநிதி மாறன், தயாநிதி மாறன் மட்டும் குணாநிதி அமிர்தம் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link