Share via:
பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் மூலம் 5,000 ரூபாய் பெற்றுக்கொள்ளுங்கள்
என்று கவர்ச்சிகரமான விளம்பரத்தை சமூகவலைதளங்களில் வெளியிட்டு ஒட்டுமொத்த வங்கிப் பணத்தையும்
ஒரு கும்பல் கொள்ளை அடிப்பதாக பெருநகர சென்னை காவல்துறை எச்சரிக்கை செய்திருக்கிறது.
ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் இந்திய குடிமகன் ஒவ்வொரு
நபரும் 5,000 ரூபாய் பெற்றுக்கொள்ளலாம் என்று கவர்ச்சிகரமான அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
இதில் பிரதமர் மோடியின் படத்தையும் மோசடியாளர்கள் இடம் பெறச் செய்வதால் மக்கள் நம்பிக்கையுடன்
அந்த விளம்பரத்தை கிளிக் செய்கிறார்கள்.
உடனே, மோசடி இணையதளத்திற்கு அழைத்துச்சென்று ஒரு தொகையைக் காட்டுகிறது.
இந்த தொகை வேண்டும் என்றால் உங்கள் ஜிபே, போன்பே, பேடிஎம் போன்ற ஏதேனும் ஒரு எண்ணை
பதியச் சொல்கிறார்கள். அந்த நம்பரை பதிவு செய்துவிட்டால், அவர்கள் கணக்கில் இருக்கும்
பணத்தை மோசடியாக பறித்துக் கொள்கிறார்கள்.
ஆகவே, அதிகாரபூர்வ அரசு தளம் தவிர வேறு எங்கேயும் எதையும் பதிவு
செய்ய வேண்டாம். சமூக ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் தளங்களில் பரவும் மோடிகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்.
ஏதேனும் மோசடி நடவடிக்கை பற்றி தெரியவந்தால் உடனடியாக 1930 என்ற எண்ணுக்கு டயல் செய்ய
வேண்டும். அல்லது www.cybercrime.gov in இணையத்தில்
புகாரை பதிவு செய்யுங்கள் என்று தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.