News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

சென்னையில் தி.மு.க. அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் நாம் தமிழர் சீமான் எல்லை மீறி பேசிவிட்டதாக பலத்த கண்டனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, மசுரு, பிசுருன்னு பேசுவேன் அதனால உனக்கென்னடா என்று காவல் துறை எஸ்.பி. வருண்குமார் மீது நேரடி தாக்குதல் நடத்தியிருக்கிறார்.

தன்னுடைய கட்சியில் இருக்கும் பெண் நிர்வாகியை இப்படி சீமான் பேசியிருக்க மாட்டார் என்று அவரது தம்பிகள் நம்பிவந்த நேரத்தில், அப்படித்தான் பேசுவேன் என்று சீமான் ஒப்புக்கொண்டுள்ளது அத்தனை பேரையும் அதிரவைத்துள்ளது. ஒரு பெண் என்ற வகையிலாவது மதிப்பு கொடுக்க வேண்டாமா என்று அவரது தம்பிகள் புலம்புகிறார்கள்.

இந்த நிலையில் திருச்சி எஸ்.பி. வருண்குமார், ‘‘பொதுமேடையில் பேசினாலும் கொச்சையான பொய்களை தமிழக மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். ஜனநாயகம், நீதிமன்றங்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. சீமானுக்கு ஏற்கெனவே எனது வழக்கறிஞர் மூலம் குற்றவியல் அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். அவரை நீதிமன்றத்தில் சந்திப்பேன்’’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

நடிகை விஜயலட்சுமி குறித்து பேசியதற்கு கடுமையான பதிலடி கொடுத்திருக்கிறார். ‘’டேய் சீமான் செருப்படி விழும்டா பிச்சக்கார நாயே’’ என்று ரொம்பவே நாகரிகமாகப் பேசி எச்சரிக்கை செய்திருக்கிறார்.

அதேபோல், சண்டாளன் என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என்று நீதிமன்றம் தெளிவு படுத்தியிருக்கும் நிலையில், கருணாநிதியை இழிவுபடுத்தும் வகையில், சண்டாளன் பாடலை மீண்டும் மேடையில் பாடியிருக்கிறார்.

இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, ‘’ சண்டாளன் என்ற வார்த்தையைக் கூறுவதன் மூலம் சீமான் கலைஞரை இழிவு படுத்தவில்லை. தலித்துகளையே இழிவு படுத்துகிறார் . காலங்காலமாக தலித்துகளை வசை பாடும் பொதுப்புத்தி மனநிலை தான் இது. துணிச்சல் என்றால், தலித்களை கோவிலுக்குள் நுழையக்கூடாது என விதிக்கப்படும் சமூக தடைகளை உடைப்பது தான் துணிச்சல். அல்லது ஆணவப்படுகொலை நடத்துகிற சாதியவாதிகளுக்கு எதிராக போராடுவதற்கு பெயர் தான் துணிச்சல். இதை எதையும் செய்யமுடியாத கோழை தான் சீமான். போலி தமிழ்த்தேசியத்துக்குள் பதுங்கி இருக்கும் இன்னொரு யுவராஜ் தான் சீமான். கோகுல்ராஜை படுகொலை செய்துவிட்டு, அதை ஞாயப்படுத்தியதைதுணிச்சல்’’வீரம்என பேசியதற்கும் சீமானுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அதேபோல் தி.மு.க.வினர், ‘’சென்னையில் வைத்து சீமான் இப்படி பேசியிருக்கிறார், தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் என்ன செய்கிறார்கள். இன்னும் எத்தனை காலம் சீமானை பொறுத்துக்கொள்வது, உடனே உள்ளே தூக்கிப் போடுங்கள்”” என்று கொந்தளித்திருக்கிறார்கள்.

சீமானை இன்னும் அதிகம் பேசவைத்து, சவுக்கு சங்கரைப் போலவே வசமாக சிக்கவைக்கும் ஏற்பாடுகள் நடப்பதாக சொல்லப்படுகிறது. பார்க்கலாம்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link