இந்தியா தென் ஆப்பிரிக்கா இடையிலான 3வது  டி20 போட்டி நேற்று (13/11/2024) நிறைவடைந்தது . இதில் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

இந்த ஆட்டத்தில் இந்தியா  நிர்ணயித்த 220 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தது. 

 

இருப்பினும் பின்வரிசையில் களமிறங்கி அதிரடியாக விளையாடிய  மார்கோ ஜான்சன் 17 பந்துகளில் 54 ரன்கள் அடித்து அணி வெற்றி பெற போராடினார். ஆனாலும்  வெற்றி பெற முடியவில்லை. 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைத்தது. 

 

இந்த ஆட்டத்தில் ஜான்சன் 16 பந்துகளில் அரைசதம் அடித்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக குறைந்த பந்துகளில் அரைசதம்  அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீன் 19 பந்துகளில் அடித்ததே சாதனையாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link