News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

திரிஷாவின் தான் மன்னிப்பு கேட்கவில்லை என்றும் மரணித்துவிடு என்று தான் சொன்னேன் என்று மன்சூர் அலிகான் மீண்டும் திமிராக கூறியுள்ளது பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கடந்த சில நாட்களாவே திரிஷா, மன்சூர் அலிகான் விவகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சில பிரபலங்கள் ஆதரவாகவும், எதிராகவும் குரல் கொடுத்து வருகின்றனர். ஒரு பக்கம் சட்ட சிக்கல், இன்னொரு பக்கம் நடிகர்கள் சங்கத்தின் அழுத்தம் என நடிகர் மன்சூர் அலிகான் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்.

இதற்கிடையில் சகநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு  என்றும், உன்னுடைய திருமணத்தின் போது உன் திருமாங்கல்யத்தை தொட்டு ஆசிர்வதிக்க எனக்கு வாய்ப்பு கொடு என்றெல்லாம் நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை விடுத்ததாக செய்திகள் வெளியாகின.

இதைத்தொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகான் கேட்ட மன்னிப்பு திரிஷா ஏற்றுக் கொண்டதாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். அதில் மன்னிப்பு கேட்பது மனிதம், மன்னிப்பது தெய்வத்தன்மை என்று பதிவிட்டார். இதைத்தொடர்ந்து இருவருக்கும் இடையில் இருந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. இன்னும் சட்டசிக்கல் மட்டுமே இருக்கிறது என்று ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான், நான் திரிஷாவிடம் மன்னிப்புகேட்கவே இல்லை. மரணித்துவிடு என்றுதான் சொன்னேன். ஆனால் அது தவறாக மன்னித்துவிடு என பொருள் கொள்ளப்பட்டுவிட்டது மீண்டும் சர்ச்சையை கிளப்பும் வகையில் மன்சூர் அலிகான் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு மன்சூர் அலிகான் பேட்டி அளித்துள்ளார். அப்போது இப்பிரச்சினை தொடர்பாக நீங்கள் மன்னிப்பு கேட்ட பிறகும் பலர் மீது ஏன் மான நஷ்ட வழக்கு போட்டுள்ளீர்கள்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த மன்சூர் அலிகான், ‘‘நான் திரிஷாவிடம் மன்னிப்பு கேட்கவில்லை. என்னுடைய பி.ஆர்.ஓ.வை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, ‘‘அடக்க நினைத்தால் அடங்கமறு, திரைநாயகி திரிஷாவே என்னை மரணித்துவிடு என்றுதான் சொன்னேன். ஆனால் அவர் என்னை மன்னித்துவிடு என்று புரிந்து கொண்டு தவறாக அறிக்கை வெளியிட்டுவிட்டார். அந்த நேரத்தில் பிரச்சினையை வளர்க்க வேண்டாம் என்று அமைதியாக இருந்துவிட்டதாக அவர் தெரிவித்தார். மேலும் நான் சொன்னது சொன்னதுதான் என்று மீண்டும் தன்னுடைய கருத்தில் மன்சூர் அலிகான் பிடிவாதமாக உள்ளது திரை நட்சத்திரங்கள் மற்றும் சமூகவலைதள வாசிகளை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link