Share via:
முதல் அமைச்சராக, அரசியல்வாதியாக மட்டுமே பாஜகவை எதிர்த்துவந்த
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நேற்றைய தினம் கருப்பு கவுன் மாட்டிக்கொண்டு,
வழக்கறிஞராக உச்ச நீதிமன்றத்தில் களமிறங்கி தேர்தல் கமிஷனை கதறவிட்டுள்ளார்.
ஸார் திருத்தத்துக்கு எதிராக தமிழகம், கேரளம், மேற்குவங்கம் ஆகிய
மாநிலங்கள் கடுமையான எதிர்ப்புக்குரல் கொடுத்தன. அதேநேரம், தமிழகத்தில் திமுகவினர்
நேரடியாக களத்தில் இறங்கி எஸ்.ஐ.ஆர். சீர்திருத்தத்தில் யாரும் விட்டுப்போகக்கூடாது
என்று பணியாற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் மம்தா பானர்ஜி உச்சநீதிமன்றக் கதவுகளைத் தட்டியிருக்கிறார்.
உச்சநீதிமன்றத்தில் மம்தா, ‘’மூடிய கதவுகளுக்குப் பின்னால் நீதி அழுது கொண்டிருக்கிறது’’
என்று முழங்கிய அவர், தலைமை நீதிபதி சூர்ய காந்த் முன் தனது வழக்கை முன்வைக்க ஐந்து
நிமிடங்கள் கோரினார். 15 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் என்று தலைமை நீதிபதி ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து பேசிய மம்தா, ‘’பிரச்சனை என்னவென்றால்… இறுதியில்,
எங்களுக்கு எங்கும் நீதி கிடைக்கவில்லை. நான் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு ஆறு முறை
கடிதம் எழுதியுள்ளேன். ஆனாலும் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. மூடிய கதவுகளுக்குப்
பின்னால் நீதி அழுது கொண்டிருக்கிறது” என்று கூறி, முதலமைச்சர் தனது வாதங்களைத்
தொடங்கினார்.
”ஒரு பெண் திருமணத்திற்குப் பிறகு புகுந்த வீட்டிற்குச் சென்று கணவரின் குடும்பப்பெயரைப் பயன்படுத்துகிறார்.
தேர்தல் ஆணையம் அவரை நீக்குகிறார்கள். அவரது பெயரை நீக்க இது ஒரு காரணமா? வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி தவறுகளைச் சரிசெய்வதற்குப் பதிலாக மேற்கு வங்கத்தைக் குறிவைத்து உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
இந்த
சிறப்புத் திருத்தம் நீக்குதலுக்கானது. சேர்ப்பதற்கானது அல்ல. தர்க்கரீதியான முரண்பாடுகள் என்ற பெயரில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் தவறாக குறிவைக்கப்பட்டுள்ளனர். தத்தா மற்றும் டட்டா, ராய் மற்றும் ரே, கங்குலி மற்றும் கங்கூலி போன்ற பொதுவான வங்காள குடும்பப்பெயர் வேறுபாடுகள் பொருத்தமின்மையாக கருதப்பட்டு தேர்தல் ஆணையம் நீக்குகிறது…’’ என்று நேரடியாக குற்றச்சாட்டுகளை
முன்வைத்துள்ளார்.
மம்தா பேசியவைகளை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு தேர்தல் கமிஷன்
பதில் கூற நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இந்த தேர்தலுக்கு செல்லுபடியாகுமா என்று பார்க்கலாம்.
