Share via:
கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் கொலை வழக்கு இப்போது உச்சநீதிமன்ற கண்காணிப்பில் சி.பி.ஐ. நடத்திவருகிறது. கொலை செய்யப்பட்ட ஐந்தாவது நாளில் தான் நாங்கள் விசாரணைக்கு சென்றோம். அதற்குள் அங்கு தடயங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. கொல்கத்தா காவல்துறை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் தகவல்கள் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.
கொல்கத்தா மருத்துவமனையில் இதே பாணியில் கடந்த 2021ம் ஆண்டு சௌமித்ரா பிஸ்வாஷ் என்ற டாக்டர் கொலை செய்யப்பட்டதாகவும் அந்த கொலை தற்கொலையாக மாற்றப்பட்டுள்ளது என்றும் புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
’’என்னுடைய மகள் தற்கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது ஏன்? அவசரம் அவசரமாக என் மகளின் உடல் எரிக்கபட்டது ஏன்?’’ என்று பெண்ணின் தந்தை கேட்கும் கேள்விக்கு காவல் துறையினரால் மம்தாவின் அதிகாரிகளாலும் எந்த பதிலும் சொல்லமுடியவில்லை.
இந்த சம்பவத்திற்குப் பொறுப்பேற்று முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும் என்று பா.ஜ.க., காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்திவருகிறார்கள். ஆனால், இதில் ஒரு திருப்பமாக டாக்டர் நடத்திய போராட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்துகொண்டு, ‘குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை தர வேண்டும்’ என்று பேசியிருக்கிறார்.
ஆனால் அவரது பெற்றோர் மம்தா மீது இன்னமும் நம்பிக்கை வைக்கவில்லை. ‘’இந்த சம்பவத்தில் ஒரே ஒரு நபர் மட்டுமே கைது செய்யப்பட்டிருக்கிறார். மருத்துவமனையில் பணியாற்றும் நபரகள் மீது சந்தேகம் உள்ளது. அதேபோல் என் மகளின் டைரி கிழிக்கப்பட்டுள்ளது, ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. எனவே முதல்வர் கொடுத்த நிவாரண நிதியை நாங்கள் வாங்கவில்லை’’ என்று தெரிவித்திருக்கிறார்.
பயிற்சி மருத்துவருக்கு நியாயம் கிடைக்கட்டும்.