Share via:
சமீபத்தில் நடிகர்
கமல்ஹாசன் தன்னை இனி உலக நாயகன் என்றோ வேறு பட்டப்பெயருடனோ அழைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு
ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனை எந்த அரசியல் தலைவர்களும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.
ஆனால், தமிழிசை செளந்தரராஜன் மட்டும், ‘’தி.மு.க.வின் மிரட்டலுக்குப் பயந்து உலக நாயகன்
பட்டத்தை கமல்ஹாசன் துறந்துவிட்டார்’ என்று விமர்சனம் செய்திருந்தார். இதற்கு மக்கள்
நீதி மய்யம் கடுமையான கண்டனம் தெரிவித்திருக்கிறது.
உலக நாயகன் பட்டத்துக்கும்
தி.மு.க. மிரட்டலுக்கும் எந்த தொடர்பும் இல்லாமல் அரைவேக்காட்டுத்தனமாகப் பேசியிருக்கிறார்.
ஆகவே அவருக்கு மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் தமிழிசை செளந்தராஜனுக்கு கொடுத்திருக்கும்
பதிலடியில், ‘’நாடாளுமன்றத் தேர்தல்ல் நின்று
எம்.பி. ஆகி மத்திய அமைச்சராகி விடலாம் என்ற கனவில், இருந்த கவர்னர் பதவியையும்
பறிகொடுத்து நிற்கிறார் தமிழிசை செளந்தராஜன். தன் வாழ்க்கையை சரியாகக் கணிக்க முடியாதவர்
நம் தலைவரின் செயல்பாட்டை கணிக்க முயன்றுள்ளார்.
நம் தலைவர் மிரட்டலுக்கு
அஞ்சுபவர் அல்ல, பண்பவரும் அல்ல. ஸ்டாலின் அரசும் மிரட்டும் போக்குள்ள அரசு அல்ல என்பதை
டாக்டர் புரிந்துகொள்ள வேண்டும்…’’ என்று வகுப்பு எடுத்திருக்கிறார் ஊடகம் மற்றும்
செய்தித் தொடர்பு மாநிலச்செயலாளர் முரளி அப்பாஸ்.
இதையடுத்து மக்கள் நீதி மய்யத்தினர் தமிழிசைக்கு பாடம் எடுத்துவருகிறார்கள்.
தமிழிசை செளந்தரராஜனுக்கு
ஆதரவாக பா.ஜ.க.வினர் யாரும் எட்டிக்கூடப் பார்க்கவில்லை என்பது தான் ஆச்சர்யமான தகவல்.
நன்றாக அடி வாங்கட்டும் என்று அண்ணாமலை டீம் இழுத்துவிட்டு வேடிக்கை பார்க்கிறது.