Share via:
மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான அறுபடை வீடு அருட்காட்சியகத்தைப்
பார்வையிட மக்கள் திரண்டுவந்துகொண்டு இருக்கிறார்கள். வேல் பூஜை மற்றும் கலை நிகழ்ச்சிகள்
மற்றும் அறுபடை முருகனை ஓர் இடத்தில் காண திரண்ட பல்லாயிரம் பக்தர்கள் திரள்கிறார்கள்.
அதேநேரம், இந்து முன்னணியினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையில்
நடந்துவரும் போராட்டத்தினால் ஏரியாவில் டென்ஷன் நிலவுகிறது.
திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பில் கட்சியின் திண்டுக்கல் ஒன்றியச்
செயலாளர் ஆர்.சரத்குமார் பேசிக்கொண்டிருந்த போது, இந்து முன்னணி மற்றும் பாஜக குண்டர்கள்
பிரச்சாரத்தை நிறுத்துமாறு தகராறு செய்து ஆர்.சரத்குமார், மாவட்டக்குழு உறுப்பினர்
பாக்கியம், சண்முகவேல், ஆகியோர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து
சரத்குமார் மற்றும் சண்முகவேல் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை
பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களை பார்ப்பதற்காக மருத்துவக் கல்லூரி
மருத்துவமனைக்குச் சென்ற கட்சியின் தோழர்களை கும்பலாக திரண்டிருந்த பாஜக மற்றும் இந்து
முன்னணியினர் அங்கேயும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் மாற்றுத் திறனாளியான ஜெயந்தி,
பொன்மதி, பெருமாள், விஷ்ணுவர்த்தன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
மக்கள் மத்தியில் தாங்கள், அம்பலமாவதால் ஆத்திரமடைந்த இந்து முன்னணி
மற்றும் பாஜக குண்டர்கள் இந்த தாக்குதலை அரங்கேற்றியுள்ளனர்இந்து முன்னணியினரின் மதவெறியை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அம்பலப்படுத்துவதை அடுத்து தாடிக்கொம்பு மற்றும்
திண்டுக்கல்லில் இரண்டு தரப்பும் மோதிக்கொண்டு ரத்தக்களறியாகியிருக்கிறது. இது குறித்து
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சண்முகம், ‘’ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக் காட்ட நாங்கள்
ஏசுவின் வாரிசுகள் கிடையாது, நாங்கள்
கார்ல் மார்க்ஸின் வாரிசுகள். நீங்கள் ஒரு கன்னத்தில் அறைந்தால் உங்கள் இரண்டு கன்னங்களிலும்
அறையும் திறனும் தைரியமும் கொண்ட இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது, தாடிக்கொம்பு மற்றும் திண்டுக்கல்லில் திட்டமிட்டு கொடூரமான
தாக்குதலை நடத்திய இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து,
கைது செய்து தமிழக அரசு மற்றும் காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்;; என்று கேட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து திருமுருகன் காந்தி, ‘’சங்கிகளுக்கு புரியும்
மொழியில், உரிய வகையில் பதில் கொடுத்த மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்டு தோழர்களுக்கு வாழ்த்துகள்.
தமிழ்நாட்டில் வாலாட்ட நினைக்கும் வடநாட்டு அடிமை வன்முறை கும்பலை விரட்டியடிப்போம்.
திமுக காவல்துறை மிக மென்மையாக,பக்குவமாக சங்கி பொறுக்கிகளை கையாள்வதையும் காணமுடிகிறது.
இதேபோல முற்போக்கு இயக்கங்கள் கலகம் செய்ய முற்பட்டிருந்தாலோ அல்லது அனுமதியற்ற ஆர்ப்பாட்டத்திற்கு
அமைதியாக ஒன்றுகூடினாலோ, அநியாயமாக வீடுகளை இடிக்க வருவதை தடுத்தாலோ நம்மை வன்முறையாக
காவல்துறை இழுத்துச் செல்லும், சிறையில் அடைக்கும் அல்லது ஸ்டெர்லைட் போல சுட்டுக்கொல்லும்
அல்லது ஜல்லிக்கட்டு போல மண்டையை பிளக்கும். அதிமுக காலத்து காவல்துறையை போல திமுக
காவல்துறையும் காவிகளிடம் மட்டும் கண்ணியமாக நடந்துகொள்கிறது…’’ என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
அரசியலை கண்டுகொள்ளாமல் மக்கள் முருகனைக் காண ஓடோடி வருகிறார்கள்.
கலவரம், ரத்தம் என எதுவுமில்லாமல் முருகன் மாநாடு நடந்தேறட்டும்.