Share via:
தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமெரிக்காவில் வசித்துவரும் தமிழர்கள் மகிழ்ச்சியோடு வரவேற்று வருகின்றனர்.
சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் சந்திப்பில் நோக்கியா உள்ளிட்ட 8 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி தமிழகத்தில் 4,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.1,300 கோடிக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அதைத்தொடர்ந்து சான்பிரான்சிஸ்கோ நகரில் சிகாகோ நகருக்கு சென்ற மாலை நேரத்தில் சிகாகோ நகரின் கடற்கரையில் சைக்கிளை ஓட்டி மகிழ்ந்த வீடியோவில் பதிவிட்ட அவர், மாலை நேர அமைதி புதிய கனவுகளுக்கு வித்திடும் என்று பதிவிட்டுள்ளார். இது குறித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதைத்தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், ‘‘சகோதரரே, சென்னையில் நாம் இருவரும் ஒன்றாக எப்போது சைக்கிள் ஓட்டுவோம்?’’ என்று அன்புடன் கேள்வி எழுப்பியுள்ளார். அப்படியென்றால், சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல்காந்தியும் இணைந்து சைக்கிள் நாள் வெகு தொலைவில் என்று மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள்.