Share via:
வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க தமிழக அரசு முடிவெடுத்தது. அதன்படி வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 400 கோடி செலவில் பேருந்து முனையம் பிரமாண்டமான வகையில் கட்டி முடிக்கப்பட்டது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
88 ஏக்கர் பரப்பளவு கொண்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தினசரி 2300 பேருந்துகள் இயக்கப்படும். இங்கு பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு தனி கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை பயணிகள் தாங்கள் சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்கு ஏதுவாக உள்ளதாக பயணிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.