Share via:
அயோத்தி கும்பாபிஷேகத்திற்கு கூட்டணிக் கட்சிகளை அழைத்து முக்கியத்துவம்
கொடுப்பதற்கு பா.ஜ.க. விரும்புகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் முக்கியக் கூட்டணிக்
கட்சியாக இருக்கும் அ.தி.மு.க. மீண்டும் உடைந்து சிதைந்து நிற்கிறது.
சமீபத்தில் இஸ்லாம் இயக்கத்தின் மதுரை மாநாட்டில் கலந்துகொண்டு,
தன்னை சிறுபான்மை மக்களின் பாதுகாவலராக காட்டிக்கொள்ள நினைக்கிறார். இந்த நிலையில்
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்வாரா என்பது
கேள்வியாக இருந்தது.
இதுகுறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘’அயோத்தி ராமர்கோயில்
கும்பாபிஷேக விழாவிற்கு யார் வேண்டுமானாலும் செல்லலாம். அது அவரவர் விருப்பத்தை பொறுத்தது.
வாய்ப்பிருந்தால் நானும் கலந்து கொள்வேன். எனக்கு கால்வலி போன்ற சிரமங்கள் இருக்கிறது.
அதை பொறுத்துதான் கும்பாபிஷேக நாளில் அங்கு செல்லமுடியுமா என்பதை முடிவு செய்வேன்…’’
என்று கூறினார்.
இதையடுத்து பா.ஜ.க.வினர், அயோத்தி விழாவில் கலந்துகொண்டு ராமரை
வணங்கிவந்தால் எடப்பாடியின் கால் வலி சரியாகிப் போய்விடும். அதனால் அவரை கலந்துகொள்ளச்
சொல்லுங்கள். இந்துவாக இருந்தால் எடப்பாடி கலந்துகொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் வைத்து
வருகிறார்கள்.
எடப்பாடியை டென்ஷனாக்குறதே பா.ஜ.க.வுக்கு வேலையாப் போச்சு.