Share via:
கடந்த 2019ம் ஆண்டு தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கு அறிவிப்பு
வெளியிடப்பட்டன. தமிழகத்தில் 36 மாவட்ட ஊராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள்,
12,525 ஊராட்சிகள் என மொத்தம் 12,949 ஊரக உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில்,
1.19 லட்சம் பதவிகள் உள்ளன.
இவற்றில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி,
வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, தென்காசி மாவட்டங்களை தவிர்த்து, 27 மாவட்டங்களுக்கு
2019 டிசம்பரில் தேர்தல் நடந்தது. மீதமுள்ள இடங்களில் 2021ம் ஆண்டு நடைபெற்றது.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும்
என்பது தேர்தல் விதி. ஆகவே, 27 மாவட்டங்களில் இந்த ஆண்டு மீண்டும் தேர்தல் நடத்தப்பட
வேண்டியிருக்கிறது. இந்த நிலையில் தி.மு.க. மூத்த தலைவர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாக
சொல்லப்படுகிறது.
அதன்படி, ஒட்டுமொத்தமாக உள்ளாட்சி அமைப்புகளைக் கலைத்துவிட்டு
2024 டிசம்பரில் தேர்தல் நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டிருக்கிறதாம். அதோடு,
உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் ஒதுக்கீடு இல்லை என்றும் கூறப்படுகிறது.
கடந்த முறை எதிர்க் கட்சியாக இருந்த நேரத்திலேயே கூட்டணிக் கட்சிகளுக்கு
சரியாக இடங்கள் ஒதுக்க முடியவில்லை. ஆகவே, இந்த தேர்தலில் கூட்டணிக் கட்சிகளும் தனித்து
நின்று கொள்ளட்டும். தேவையில்லாமல் பேச்சுவார்த்தை நடத்தி குழப்பிக்கொள்ள வேண்டாம்
என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்.
இந்த தகவல் அறிந்து கூட்டணிக் கட்சிகள் கொதித்துப் போயிருக்கிறாகள்.
இந்த மனக்கசப்பு சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்கக் கூடாது என்பதற்காகவே, இந்த ஆண்டிலேயே
தேர்தல் நடத்தி முடிக்க ஸ்டாலின் அவசரம் காட்டுகிறாராம்.