Share via:
உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளிய பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் 3வது இடத்தை பிடித்துள்ளார்.
உலகப்பணக்காரர்கள் பட்டியலில் பெர்னார்டு அர்னால்டு முதலிடத்தை பிடித்துள்ள நிலையில், 2வது இடத்தில் ஜெப் பசோஸ் உள்ளார்.
புளூம்பெர்க் பில்லினியர்கள் குறியீட்டின்படி உலக பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்தை பிடித்த ஜூகர்பெர்க் 187 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உள்ளார். இவரது சொத்தின் மதிப்பு 58.9 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 2020ம் ஆண்டுக்கு பிறகு ஜூகர்பெர்க், முதல் முறையாக எலான் மஸ்க்கை முந்தியுள்ளது சர்வதேச நாடுகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் (மார்ச்) வரை முதலிடத்தில் இருந்த எலான் மஸ்க் 181 பில்லியன் டாலர்களை பெற்று உலக பணக்காரர்கள் பட்டியலில் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இவரது சொத்து நிகர மதிப்பு 48.4 பில்லியன் டாலராக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.