Share via:
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நாளை முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நூலகங்கள் திறக்கப்பட உள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் பெயரில் இயங்கி வரும் ‘விஜய் மக்கள் இயக்கம்’ சார்பில் அதன் நிர்வாகிகள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நூலகங்களை திறக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘‘தளபதி விஜய் நூலகம்’ திட்டம் நாளை (நவ.18) காலை 10.35 மணியளவில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தொண்டரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மேற்கு தாம்பரத்தில் தொடங்கப்பட உள்ளது.
அதோடு மட்டுமல்லாமல் பல்லாவரம் தொகுதியில் தாம்பரம் மாநகராட்சி பகுதியிலு ‘தளபதி விஜய் நூலகம்’ தொடங்கப்பட உள்ளது. அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3, அரியலூர், நாமக்கல் மேற்கு, சென்னை கிழக்கு, வடசென்னை கிழக்கு, வடசென்னை வடக்கு இளைஞர் அணி மற்றும் வேலூர் தொண்டர் அணி ஆகிய மாவட்டங்கள் என மொத்தம் 11 இடங்களில் நூலகங்கள் திறக்கப்பட உள்ளன.
அதற்கு அடுத்தபடியாக வருகிற (நவ.) 23ம் தேதியன்று திருநெல்வேலி மாவட்டத்தில் 5, கோவை மாவட்டத்தில் 4, ஈரோடு மாவட்டத்தில் 3, தென்காசி மாவட்டத்தில் 2, சேலம், புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, திண்டுக்கல் மேற்கு, கன்னியாகுமரி மற்றும் திருப்பூர் என மொத்தம் 21 இடங்களில் ‘தளபதி விஜய் நூலகம’ திறக்கப்பட உள்ளது’’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.