Share via:
கோவை சிறையில் சவுக்கு சங்கர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை
இருக்கிறது, பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் சவுக்கு சங்கரை பைப்பினால் அடித்து துன்புறுத்தி
கையை உடைத்திருக்கிறார்கள் என்று அவரது வழக்கறிஞர் பேட்டி கொடுத்திருக்கிறார்.
வழக்கறிஞர் பேசுகையில், ‘’நீதிமன்ற பாதுகாப்பில் இருக்கும் போதே
அவருக்குப் பாதுகாப்பு இல்லை. அடுத்து காவல் துறை கஸ்டடிக்குப் போகும் பட்சத்தில் அவருக்கு
என்ன பாதுகாப்பு இருக்கும்? எனவே ஜெயில் சூப்பிரண்டெண்ட் மற்றும் பத்து ஜெயில் வார்டன்கள்
மீது நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றத்திற்குப் போகிறோம்.
சனிக்கிழமை அடித்து துன்புறுத்தியிருக்கிறார்கள். ஆனால், இன்னமும்
எக்ஸ் ரே எடுக்கவில்லை. கை, கால்களில் அடிபட்டிருப்பதால் ரொம்பவும் சிரமப்பட்டு நடக்கிறார்.
கை உடைந்து போயிருக்கிறது. கொப்பளம் இருக்கிறது.
இதற்காக சிறை மாற்றம் செய்வதற்கு கேட்பீர்களா என்ற கேள்வி எழுப்புகையில்,
‘தமிழகம் முழுக்க எங்கு சென்றாலும் அதிகாரிகள் தமிழக அரசு என்ன சொல்கிறதோ அதையே கேட்பார்கள்.
எனவே, சி.பி.ஐ. என்கொயரி கேட்பதற்கு இருக்கிறோம். அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை
அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
கோவைக்கு வரும்போது ஏற்பட்ட விபத்து குறித்து கேட்கையில், அது
திட்டமிட்ட விபத்து அல்ல என்று சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார். பிரேக்
அடிக்கும் போது உதட்டில் மட்டுமே சிறிய காயம் ஏற்பட்டது. மேலும் உடன் பத்துக்கும் மேற்பட்ட
காவலர்கள் இருந்தார்கள் என்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட இருப்பதை
தெரிந்துகொண்டு, அதை தடுப்பதற்காகவே இப்படியொரு நாடகம் நடக்கிறது என்று காவல் துறை
வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.