News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கான காலக்கெடு நாளையுடன் (செப்.30) முடிவடைவதால் வங்கிகளுக்கு பொதுமக்கள் சிலர் விரைந்துள்ளனர்.

செப்டம்பர் 30ம் தேதிக்கு மேல் இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என ரிசர்வ்  வங்கி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதைத்தொடர்ந்து பொதுமக்கள் வங்கிகளில் தங்களிடம் புழக்கத்தில் இருக்கும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவித்தது.

இதனால் வங்களில் குவிந்த பொது மக்களிடம் தங்களிடம் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பெரும்பாலும் மாற்றிவிட்டார்கள் என்று தெரிகிறது. இருப்பினும் ரிசர்வ் வங்கி அறிவித்தபடி நாளையே (செப்.30) 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான கடைசி நாள் என்பதால் பொது மக்கள் எங்கேனும் தெரியாமல் 2 ஆயிரம் ரூபாயை வைத்திருப்போமோ என்று வீடுகளிலும், அலுவலகங்களிலும் அலசி ஆராய்ந்து வருகிறார்கள்.

மேலும் அரசு பேருந்துகளிலும், ஆம்னி பேருந்துகளிலும் பயணம் செய்யும் பயணிகள் தங்களிடம்  இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை டிக்கெட்டுகளை வாங்கி மாற்றிவந்த நிலையில் தற்போது அதுவும் முடிவுக்கு வந்துவிட்டது. எனவே பொது மக்கள் யாரேனும் 2 ஆயிரம் ரூபாயை வைத்திருந்தால் உடனடியாக வங்கிகளுக்கு சென்று மாற்றிக் கொள்வதுதான் ஒரே வழி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link