Share via:
கோலிவுட் இயக்குனரான அட்லீ, பாலிவுட்டில் தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்ததால் அங்குள்ள டைரக்டர்கள் மிரண்டு போயுள்ளனர்.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய்சேதுபதி, யோகிபாபு என மொத்த நட்சத்திர பட்டாளமே நடித்து கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி வெளியான படம் ஜவான். இத்திரைப்படத்தை இயக்கிய அட்லீ, இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பின்னர் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார்.
அட்லீ பழைய படங்களை காப்பி எடுத்து புதுப்படங்களில் வெளியிடுகிறார் என்று அவர் மீதும் அவர் இயக்குனம் திரைப்படங்கள் கவலையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
அதே போல் ஜவான் திரைப்படம் மீதும் பல படங்களில் காப்பி என்று விமர்சனம் எழுந்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. இருப்பினும் வசூல் ரீதியாக தினமும் புதுப்புது சாதனைகளை படைத்து வருகிறது.
அதன்படி ஷாருக்கானின் பதான் திரைப்படம் ஏற்கனவே 1,000 கோடி ரூபாய் வசூல் சாதனை புரிந்த நிலையில் அந்த சாதனையை அவரது அடுத்த படமான ஜவான் படம் முறியடித்துள்ளது. அதாவது ஜவான் திரைப்படம் ரூ.1,100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அட்லீயின் முதல் படத்திலேயே இப்படிப்பட்ட விஸ்வரூபமா என்று பாலிவுட் இயக்குனர்கள் மிரண்டு போயுள்ளனர். அத்துடன் அட்லீயின் அடுத்தபடத்தை சக இயக்குனர்கள் உற்று நோக்கி வருகிறார்கள்.

