Share via:
தனக்கு பா.ஜ.க.வில் உரிய மரியாதை தரப்படவில்லை என்று புலம்பிய
குஷ்புவை உடனடியாக மதுரையில் போராட்டத்துக்குத் தலைமை தாங்குவதற்கு அனுப்பிவிட்டது
தலைமை. நீதிப் பேரணிக்கு நிச்சயம் அனுமதி கிடைக்காது என்பது தெரியும் என்பதால் போராட
முயன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆடியோ ரிலீஸ்க்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு, ‘நான்
சென்னைக்கு வந்து 38 வருஷமா கண்ணகியாத்தான் வாழ்ந்துக்கிட்டு இருக்கிறேன்’’ என்று கூறினார்.
இதையடுத்து மதுரை போராட்டத்திற்கு தலைமை தாங்க அனுப்பப்பட்டார்.
இந்த போராட்டத்தில் பேசிய குஷ்பு, ‘’இது பிரியாணி கொடுத்து கூட்டுன
கூட்டம் இல்ல.. தி.மு.க காரங்க பயத்துல இருக்காங்க….யார் அந்த சார்?… இத்தன போலீசை
வச்சிருக்கீங்க அந்த சாரை கண்டுப்பிடிக்க முடியலையா? என் மண்ணில், கண்ணகி பிறந்த தமிழ்நாட்டில்
ஒரு பிரச்சனை என்றால் நான் வந்து நிற்பேன்’’ என்று கையில் சிலம்பை வைத்துக்கொண்டு தி.மு.கவை
கடுமையாக தாக்கி பேசினார். குஷ்பு. அதேநேரம் மேடையில், ‘’கருணாநிதி பெண்களுக்கு சுயமரியாதையைக்
கற்றுக்கொண்டவர். அவர் கொடுத்த சுயமரியாதையை உங்களால் பெண்களுக்குத் தரமுடியலையா?’’
என்று திடீரென கருணாநிதியைப் பாராட்டிப் பேசியதைக் கண்டு பா.ஜ.க.வினர் மிரண்டு போனார்கள்.
இதையடுத்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குஷ்பு உள்ளிட்ட
பாஜகவினரை கைது செய்தது காவல்துறை. பேரணிக்கு அனுமதி தருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை
பேரணிக்கு அனுமதி தர மாட்டார்கள் என்பது தெரியும் என்றபடி குஷ்பு வேனில் ஏறினார்.
இதையடுத்து அண்ணாமலை, தமிழிசை உள்ளிட்ட தலைவர்கள் இந்த கைதுக்கு
கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். ‘’மதுரையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதிக்கப்பட்ட
பெண்ணுக்கு நீதி கேட்டு குரல் எழுப்பிய சகோதரி குஷ்பூ சுந்தர், பாஜக மகளிர் அணி தலைவி
திருமதி உமாரதி செயலாளர் பிரமிளா சம்பத் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரஸ்வதி மாநில
செயலாளர் ஆனந்த பிரியா மற்றும் மகளிர் அணி நிர்வாகிகளை கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன்….
அதே மதுரையில் டங்சன்
தொழிற்சாலைக்கு இப்போது அனுமதி மறுபரிசீலனை செய்யப்படுகிறது என்று மத்திய அரசு தெரிவித்த
பின்பும் வேண்டுமென்றே போராடும் வைகோவிற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.நீதி கேட்டு
போராடிய கண்ணகியின் மண்ணில்.. பெண்கள் நீதி கேட்பதற்கு தடை விதிக்கும். திமுக அரசிற்கு
மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.’’ என்று கொதிக்கிறார்கள்.
நேற்று செளமியா அன்புமணி, இன்று குஷ்பு. எப்படியோ குஷ்புக்கு மீண்டும்
மேடை கிடைத்துவிட்டது.