Share via:
அரவிந்த் கெஜ்ரிவால் விவகாரம் தொடர்பாக சட்டவிரோத பண பரிமாற்ற
தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை மேற்கொள்ளும் கைது நடவடிக்கைகள் தொடர்பான
அரசியல் சாசன கேள்விகளை முன்வைத்து அதை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி இன்று உச்ச
நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது, அமலாக்கத் துறைக்கு பெரும் சிக்கலாக மாறும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து உச்ச நீதிமன்றம், ‘’சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்புச்
சட்டத்தின் கீழ் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மீதான அமலாக்க துறையின் கைது
நடவடிக்கை கவலை அளிக்கிறது’’ என்ற உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு
இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் பிணையில் வெளியில் இருப்பதற்கும் விசாரணையை நடத்துவதற்கும் எந்த
சம்பந்தமும் இல்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கெஜ்ரிவாலுக்கு தரப்பட்ட
ஜாமீனுக்கு டெல்லி ஹைகோர்ட் இடைக்கால தடை விதித்திருந்தது. இந்நிலையில் உச்சநீதிமன்றம்
கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால பிணை வழங்கி
உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில முதல்வராக
இருக்கக் கூடியவர் 90 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்திருக்கிறார் எனவே நாங்கள் அவரை
இடைக்காலப் பிணையில் வெளியில் வர அனுமதிக்கிறோம் என தீர்ப்பு ஒரு நபரை கைது செய்தால்
மட்டுமே விசாரணை நடத்த முடியும் என தொடர்ந்து கூறுவதை ஏற்க முடியாது என உச்ச நீதிமன்றம்
தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் ரிலீஸ் செய்யப்பட வாய்ப்பு உருவாகியுள்ளது.
அதேநேரம், அரசியல் தலைவர்களை பழி வாங்கும் நோக்கில் சிறைக்குள் தள்ளும் நடவடிக்கைக்கும்
முடிவு ஏற்படவும் வாய்ப்பு உண்டு.