Share via:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, அதை யூனியன் பிரதேசங்களாக பா.ஜ.க. அரசு மாற்றியது. இது தொடர்பான வழக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்திய அரசு எடுத்த முடிவு சரியானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
இந்த தீர்ப்பு பா.ஜ.க.வை ரொம்பவே குஷிப்படுத்தியிருக்கும் நிலையில், நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது.
நீதிமன்றத் தீர்ப்பு காரணமாக எதிர்க்கட்சி ஆளும் மாநில அரசுகளை கலைக்கமுடியாத நிலையில் மத்திய அரசு இருக்கிறது. தற்போது இந்த சட்டத்துக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம் காரணமாக, எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் வன்முறை, தீவிரவாதம் போன்றவை நிகழ்வதாக காரணம் காட்டி இரண்டு அல்லது மூன்று யூனியன் பிரதேசமாக மாற்றுவதற்கு வாய்ப்பு உண்டு.
தென் மாநிலங்களில் பா.ஜ.க. வெல்வதற்கு வாய்ப்பே இல்லை என்று கருதப்படுகிறது. ஆகவே, 2024 தேர்தலில் பா.ஜ.க. வென்று ஆட்சிக்கு வந்தால் இந்த சட்டத்தைக் காரணம் காட்டி தமிழகம், கேரளாவை பிரிப்பதற்கு வாய்ப்பு உண்டு என்றே அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்தியா கூட்டணி இதற்கு எப்படி ரியாக்ட் செய்யப்போகிறது என்பதைப் பார்க்கலாம்.