News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

விஜய் கட்சி ஆரம்பிக்கப்போவதாக அறிவிப்பு வெளியிட்ட தினத்திலிருந்து தினமொரு வாழ்த்து அனுப்பிக்கொண்டே இருந்தார் நாம் தமிழர் சீமான். அதோடு, கொள்கைகள் சரியாக இருந்தால் கூட்டணி வைப்பதில் ஆட்சேபனை இல்லை என்றும் தெரிவித்திருந்தார். மாநாடு தொடங்கிய நேற்றைய தினமும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

ஆனால், மாநாடு முடிந்த பிறகு விஜய் மீது சீமானுக்கு கடும் அதிருப்தி உண்டாகியிருப்பதை அவரது பேச்சிலிருந்து உணர முடிகிறது. ஏனென்றால் சீமான் ஏற்றுக்கொள்ளாத பெரியாரை தன்னுடைய முதல் தலைவராக அறிவித்தார் சீமான். அதோடு பெருந்தலைவர் காமராஜரை தேசியத்தின் அடையாளம் என்றும் கூறினார். கொள்கைகள் குறித்துப் பேசிய விஜய், “கொள்கை கோட்பாட்டு அளவில் திராவிடத்தையும், தமிழ் தேசியத்தையும் நாம் பிரித்து பார்க்கப் போவது இல்லை. திராவிடமும், தமிழ் தேசியமும் இந்த மண்ணோட இரண்டு கண்கள் என்பது தான் நம்முடைய கருத்து.” எனக் கூறினார்.

எனவே விஜய் பேச்சு குறித்து சீமானிடம் கேட்கப்பட்டதும், ‘’திராவிடமும், தமிழ் தேசியமும் இருகண்கண் என்று அவருடைய கருத்துகள், எங்களுடைய கொள்கைக்கு நேர் எதிரானது. திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்று இல்லை. கருவாட்டு சாம்பார் என்பதுபோல் இருக்கிறது விஜய் இரண்டையும் சேர்த்துப் பேசியிருப்பது. இது என் நாடு, என் தேசம், இங்கு வாழுகின்ற மக்களுக்கான அரசியல் தமிழ் தேச அரசியல். எங்களுடைய கொள்கை தமிழ் தேசம். எனவே எங்கள் இருவருடைய கொள்கையும் ஒன்றாக இல்லை. மொழிக் கொள்கையிலும் முரண்பாடு இருக்கிறது. மற்றபடி, சில விஷயங்களில் நாங்கள் சொல்வதையே அவரும் சொல்கிறார்.” என்றபடி நழுவி விட்டார்.

நேற்று கூடிய கூட்டம் சீமானை மிரட்டியிருக்கிறது. மேலும் சீமான் மேடையில் பேசிய ஸ்டைலில் விஜய்யும் பேசியிருக்கிறார். ஆகவே, இத்தனை நாட்களும் சீமானுடன் இருந்த குட்டீஸ் ரசிகர்கள் எல்லாம் விஜய்க்கு மாற வாய்ப்புகள் அதிகம். இந்த தேர்தலில் அதிக சேதாரம் சீமானுக்குத் தான் இருக்கும் என்கிறார்கள்.

பார்க்கலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link