Share via:
ஜெயலலிதா, எடப்பாடி, ஸ்டாலின் காலம் தொடங்கி அதிரடி என்பதற்கு
உதாரணமாகத் திகழ்பவர் ஐ.ஜி. அஸ்ரா கார்க். இவரது தலைமையில் கரூர் அசம்பாவித சம்பவத்தை
விசாரிக்க அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது.
அரசியல் கூட்டங்களுக்கு நெறிமுறைகளை வகுக்க கோரி தினேஷ் என்பவர்
தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது,
கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த நீதிபதி செந்தில் குமார், கரூரில்
மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு நிகழ்ந்துள்ளதாகவும் காட்டமாகக் கூறினார். இந்த சம்பவம்
தொடர்பாக வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்த
நீதிபதி செந்தில் குமார், அந்தக் குழுவிடம் வழக்கு ஆவணங்களை உடனடியாக ஒப்படைக்க கரூர்
போலீசாருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவைச் சேர்ந்த அஸ்ரா கார்க் அடிப்படையில்
இன்ஜினியர். யு.பி.எஸ்.சி தேர்வெழுதி கடந்த 2004-ம் ஆண்டு தமிழ்நாடு கேடர் ஐ.பி.எஸ்.
ஆனார். திருப்பத்தூரில் உதவி காவல் ஆணையராக தனது பணியைத் தொடங்கினார்.
மதுரையில் அழகிரியின் ஆட்டம் உச்சகட்டத்தில் இருந்தபோது, அவரது
வலதுகரமாக இருந்த பொட்டு சுரேஷை போட்டுத்தள்ளி உச்சத்துக்குப் போனார்.
2008-2010 காலக்கட்டத்தில் திருநெல்வேலியில் எஸ்.பி.யாக பணியாற்றினார்.
இந்தக் காலக்கட்டத்தில் கந்துவட்டியைத் தடுக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
2010-ல் மதுரை மாவட்ட கண்காணிப்பாளராக பொறுப்பேற்றார். மதுரை உத்தபுரத்தில் தீண்டாமை
சுவரை அகற்றுவதில் பெரும் பங்காற்றினார்.
மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை
வழக்கில் விசாரணை அதிகாரியாக அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டார். 2021-ல் மதுரையில் நடைபெற்ற
இரட்டைக் கொலை வழக்கில் துணிந்து செயல்பட்டதற்கு உயர்நீதிமன்றத்தில் பாராட்டைப் பெற்றவர்
அஸ்ரா கார்க்.
திருவள்ளூர்ல ஒரு பையன் கடத்தப்பட்ட வழக்குல எம்எல்ஏ பூவை மூர்த்தி,
தன்னை விட உயர் அதிகாரி ஏடிஜிபி ஜெயராமன் சம்பந்தப்பட்டது தெரிஞ்சும் உயரதிகாரி என்று
கூட பாக்காம தூக்கி உள்ளே வைத்தவர்.
விஜய் நெரிசல் விவகாரத்தில் அரசு மீது குற்றமா அல்லது விஜய் மீது
குற்றமா என்று பார்ப்பதை விட, இவர் முதலில் யாரை கைது செய்து தூக்கப் போகிறார் என்பதே
முக்கியக் கேள்வியாக இருக்கிறது.