Share via:
மதுவிலக்கு கொண்டுவருவோம்
என்று சொன்ன ஸ்டாலின் ஆட்சியில் அமோகமாக டாஸ்மாக் ஊழல் நடக்கிறது என்பது தான் இப்போதைய
ஹாட் டாபிக். ஒரு தந்தையாகக் கேட்டுக்கொள்கிறேன் குடிக்காதீங்க என்று அட்வைஸ் தரும்
முதல்வர் ஸ்டாலினுக்குத் தெரிந்தே டாஸ்மாக் கடையில் சட்டத்துக்குப் புறம்பாக கரூர்
கும்பல் புதிய வழியில் வசூல் வேட்டை நடத்துவதாக செய்திகள் வெளியாகின்றன.
இது குறித்துப் பேசும்
பா.ஜ.க.வினர், ‘’தமிழ்நாடு முழுவதும் சுமார் 5400 டாஸ்மாக் கடைகள்
இருக்கிறது, கடையுடன்
இணைக்கப்பட்ட பார்கள் 3240 உள்ளது,
அது போக FL2 எனப்படும்
க்ளப் வகை பார்கள் சுமார் 1000 உள்ளன. ஒரு கடைக்கு மாதம் மூன்று லட்சம் ரூபாய் என
வருடம் 36 லட்சம் ரூபாயை கம்பெனிக்குத் தர வேண்டியது கட்டாயம்.
கரூர் கம்பெனிக்கு இந்த தொகையைக் கொடுத்துவிட்டால் அரசுக்குச்
செலுத்த வேண்டிய கட்டணத்தைக் கூட அவர்கள் கட்டுவதற்கு அவசியமில்லை. என்ன சிக்கல் வந்தாலும்
கரூர் கம்பெனி பார்த்துக்கொள்ளும். இந்த வகையில் பார் உள்ள 4,240 கடைகளும் வருடத்துக்கு
36 லட்சம் கொடுத்தால் ஆண்டுக்கு 1500 கோடி ரூபாய் வசூல் ஆகிறது’’ என்று கணக்கு காட்டுகிறார்கள்.
இந்த விவகாரத்தை ஆதாரபூர்வமாக எடுத்து கரூர் கம்பெனியை மடக்குவதற்குத்
திட்டம் தீட்டப்பட்டு வருகிறதாம். ஸ்டாலினுக்குத் தெரிந்தே இந்த கொள்ளை நடப்பதால்
அவரும் மாட்டிக்கொள்வார். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக இதற்கான அதிரடி ஆபரேஷன் ஆரம்பமாகும்
என்கிறார்கள். ஆனால் தி.மு.க.வினரோ, ‘’அ.தி.மு.க காலத்திலும் இது தான் நடந்தது. இதில்
மத்திய அரசுக்கும் பங்கு போகிறது’’ என்று அதிர வைக்கிறார்கள்.
மக்கள் மட்டும்தான் இளிச்சவாயர்களா..?