Share via:

கலைஞர் கருணாநிதி பெயரில் தமிழ்நாட்டில் எந்த பல்கலைக்கழகம் இல்லையே
என்று பா.ம.க.வின் ஜிகே மணி, வருத்தப்பட்டதைப் பார்த்து வைகோ, திருமாவளவன் ஆகியோர்
பதட்டத்திற்கு ஆளாகிவிட்டனர். கூட்டணிக் கட்சியினராக இருந்தும் தங்களுக்கு இப்படி ஜால்ரா
போடத் தெரியவில்லையே என்று வருந்தும் நிலைக்கு ஆளாகிவிட்டார்கள். இதையடுத்து கூட்டணி
மாற்றம் உண்டா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.
சட்டமன்றத்தில் பேசிய ஜி.கே.மணி சிறப்பு கவனம் ஈர்ப்புத் தீர்மானம்
கொண்டுவந்தார் அவர், ‘’கலைஞருக்கு “முத்தமிழ் அறிஞர்” எனும் பட்டத்தை அளித்தவன்
நான் தான் என்றும் ஜி.கே. மணி பெருமிதம் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், “நீங்கள்
இயல், இசை, நாடகம் மூன்றிலும் வல்லவர். அதனால் முத்தமிழ் அறிஞர் என அழைக்க வேண்டும்
என கலைஞரிடம் நான்தான் சொன்னேன். கலைஞர் கூட தயங்கினார்.. நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்
மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன் என இந்த சாமானியன் தான் சொன்னேன். அதன் பிறகு கலைஞர்
ஏற்றுக்கொண்டார். அனைவரும் இன்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் என அழைக்கிறார்கள். காமராஜர்,
அண்ணா பெயரில் பல்கலைக்கழகங்கள் இருக்கும்போது கலைஞர் கருணாநிதி பெயரில் இல்லையே’’
என்று வருத்தப்பட்டார்.
இதையடுத்து கும்பகோணத்தில் தமிழக அரசே கலைஞர் கருணநிதி பெயரில்
பல்கலைக்கழகம் அமைக்க இருக்கிறது. இது குறித்து தி.மு.க.வினர், ‘’திருவாரூர் மத்தியப்
பல்கலைக்கழகத்திற்குக் கலைஞர் பெயரைச் சூட்டுவதில் சட்டச் சிக்கல்கல் இருந்த நிலையில்
கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசே பல்கலைக்கழகம் அமைக்கவிருக்கிறது என்ற அறிவித்திருப்பது
சூப்பர். இதுதான் கலைஞருக்குக் கட்டப்படும் மெய்யான அறிவாலயம் கலைஞர் மீது காதல் கொண்டவர்கள்
சார்பில் முதலமைச்சருக்கு நன்றி’’ என்று கொண்டாடுகிறார்கள்.
ஜிகே மணியின் கோரிக்கையைக் கேட்டதும் கூட்டணிக் கட்சியினர் அதிர்ந்தே
போனார்கள். தங்களுக்குத் தோன்றாத ஐடியாக்கள் எல்லாமே பா.ம.க.வுக்கு வருகிறதே என்று
அதிர்ந்து நிற்கிறார்கள். வரும் சட்டமன்றத் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது அல்லது
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது என இரண்டு வாய்ப்புகள் மட்டுமே
இருக்கின்றது.
இந்த வாய்ப்பை மூன்றாக அதிகரிக்கவே சட்டமன்றத்தில் ஒரு ஜால்ரா
போடுமாறு அய்யா ராமதாஸ் அறிவுறுத்தியிருக்கிறார். ராமதாஸ் தங்கள் கூட்டணிக்கு வரவில்லை
என்றாலும் விஜய் கட்சியுடன் கூட்டணி வைத்தால் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு எளிதாகும்
என்று தெரிகிறது. இதையடுத்தே அரசியல் வேட்டை நடப்பதாக சொல்லப்படுகிறது.
