Share via:
கருணாநிதிக்கு தமிழகம் முழுக்க லட்சக்கணக்கான சிலைகளை நிறுவும்
முயற்சியில் தி.மு.க. பல்வேறு முன்னெடுப்புகளை செய்துவருகிறது. அதுவும் முக்கியமாக
ஒவ்வொரு ஊரின் முக்கிய பகுதிகளிலும் சிலை வைப்பதில் தீவிரம் காட்டுகிறது.
இந்த வகையில் கருணாநிதியின் சினிமா பங்களிப்பை காட்டும் வகையில்
சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் நுழைவாயிலில் கருணாநிதி சிலை அமைக்கும் முயற்சி
தொடங்கியது. தனியாரின் இடத்தில் கருணாநிதி சிலையை நிறுவக்கூடாது என்று அரசியல் கட்சிகள்
போராட்டத்தில் இறங்கின.
எதிர்ப்பு வலுப்பதைக் கண்டதும், அந்த இடத்தில் கருணாநிதி சிலையை
வைக்கும் முடிவை தி.மு.க. கைவிட்டுள்ளது. அதேநேரம், சட்டப்படி அந்த இடத்தை கைப்பற்றும்
முயற்சி நடைபெற்று வருகிறது.
அந்த முகப்பு இருக்கும் இடத்தை அளந்து பார்த்ததில், அது மாநில
நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடம் என்பது தெரியவந்துள்ளது. இப்படி அரசு நிலத்தில்
அமைப்பட்டுள்ள வளைவு உள்ளிட்ட இடங்களை சொந்தம் கொண்டாடி வரும் வர்மா, இடங்களை விற்று
கோடிகளில் சம்பாதித்ததாக சொல்லப்படுகிறது.
ஆகவே, அந்த அரசு நிலத்தை ஆர்ஜிதம் செய்யும் நடவடிக்கை தொடங்கயிருப்பதாக
சொல்லப்படுகிறது. அந்த இடத்தில் ஆக்கிரமிப்பாக கட்டப்பட்டுள்ள வளைவினை இடித்துத்தள்ளுவதா
அல்லது அதனை சுற்றி பூங்காவை உருவாக்கி, அதன் மதிப்பை குறைப்பதா என்ற ஆலோசனைகள் நடந்துவருகின்றன.
கருணாநிதி சிலையாவும் சிக்கலாத்தான் இருக்காரே…