Share via:
காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
காவிரி நதிநீரை தமிழகத்திற்கு திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினரும், விவசாய அமைப்பினரும் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பெங்களூர், மைசூரில் 144 தடை உத்தரவு, கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் என தொடர்ந்து கர்நாடக மாநிலம் தனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.
அதைத்தொடர்ந்து தமிழக அரசு நேற்றைய (அக்.9) சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காவிரி விவகாரம் குறித்து கர்நாடக அரசு உத்தரவிட ஒன்றிய அரசை வலியுறுத்துவதற்கான தனித்தீர்மானத்தை தாக்கல் செய்து ஒருமனதாக நிறைவேற்றியது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கர்நாடக அரசும் தமிழகத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதை நிரூபிக்கும் வகையில் கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பேசும்போது, ‘‘கர்நாடகாவில் நீர் இல்லை என்பதை சுட்டிக்காட்டி சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று கூறிய அவர், எங்களது விவசாயிகள் நலனை நாங்கள் பாதுகாக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.