Share via:
ஸ்டாலினுக்காக திமுகவில் இருக்கும் கட்சியினருக்கு உதயநிதி ஒரு
பொருட்டே இல்லை. ஸ்டாலினுக்குப் பிறகு யார் என்ற கேள்வி எழுந்திருக்கும் நிலையில்,
கனிமொழியே இரண்டாம் கட்டத் தலைவர்களின் சாய்ஸ் ஆக இருக்கிறது.
எனவே, இந்த சட்டமன்றத் தேர்தலில் களம் இறங்க வேண்டும் என்று அவரது
ஆதரவாளர்கள் நெருக்கடி கொடுக்கிறார்கள். கனிமொழிக்கும் இதில் ஆர்வம் இருந்தாலும் தயங்கிக்கொண்டே
இருக்கிறார்.
இந்நிலையில் கனிமொழிக்கு ஆதரவாக சீமான் குரல் கொடுத்தார். இப்போது
சவுக்கு சங்கர் களம் இறங்கியிருக்கிறார். சவுக்கு சங்கர் அவரது பதிவில், ‘’ஒரு அரசியல்வாதிக்கு
வேண்டிய அடிப்படையான குணம் : அதிகாரம் மற்றும் பதவியை நோக்கிய தணியாத வெறி. இது இல்லாதவர்கள்
வெற்றியை அடைவது கடினமே. கனிமொழிக்கு இது இல்லையோ என்று தோன்றுகிறது. அப்பா பாவம்,
அம்மா பாவம் என்று 6 மாதம் திகார் சிறைக்கு சென்றார். அண்ணன் (ஸ்டாலின்) சிறை செல்ல
வேண்டியதை அதன் மூலம் தடுத்தார்.
2009 UPA அரசில் அவர்தான் மத்திய அமைச்சராகியிருக்க வேண்டும்.
அழகிரி நான் ஆக வேண்டும் என்று சொன்னபோது, கருணாநிதி “அண்ணன் கேக்கறான்மா. இல்லன்னா
சண்டை போடுவான் மா” என்று சொன்னபோது அதையும் விட்டுக் கொடுத்தார். இவ்வளவையும் செய்த
பிறகு இன்று, அவர் பரிந்துரைக்கும் நபர்களுக்கு MLA சீட் கூட கொடுக்க மாட்டேன் என்று
ஸ்டாலின் பிடிவாதமாக இருக்கிறார்.
மகனுக்கு போட்டி என்று நைசாக கனிமொழியை டெல்லி பக்கம் தள்ளி விட்டனர்
ஸ்டாலின் குடும்பத்தினர். சரி டெல்லி அரசியலையாவது பார்க்கலாம் என்றால் அங்கேயும் திராவிட
மாப்பிள்ளை சார் நாட்டாமை செய்கிறார். ஸ்டாலினுக்கு பிறகு கட்சியில் கனிமொழியின் எதிர்காலம்
என்ன ? இன்பநிதி வாழ்க என்று சொல்வதா ? 2026 தேர்தலில் போட்டியிடாமல் கோட்டை விட்டால்,
கனிமொழிக்கு அரசியல் எதிர்காலம் என்பது திமுகவில் கிடையாது. அதிமுகவில் வேண்டுமானால்
சேரலாம்.
இப்போதும் “அண்ணன் பாவம்”
என்றால் கடைசியில் இன்பநிதிக்கு சாமரம் வீசும் நிலைதான் ஏற்படும். அழுத பிள்ளைதான்
பால் குடிக்கும். திமுக தலைவராக வேண்டுமா ? இன்பநிதிக்கு குடை பிடிக்க வேண்டுமா என்பதை
முடிவெடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது…’’ என்கிறார்.
கனிமொழி ஒரு தலைவியாக வேண்டுமா அல்லது கட்சியின் இரண்டாம் கட்டத்
தலைவராகவே இருக்கப்போகிறாரா என்பதை நிர்ணயிக்கும் தேர்தல் இது.
