News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

கூட்டணிக்கு யாராவது கிடைப்பார்களா என்று அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் ஆள் தேடிக்கொண்டு இருக்கும் நேரத்தில் தி.மு.க.விலோ தேர்தல் பிரசாரத்தையே தொடங்கிவிட்டார்கள்.

மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில், உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக மூன்று நாட்களுக்கு பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

அந்தவகையில் நேற்று நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, கடலூர், சிவகங்கை, ஸ்ரீபெரும்புதூர், ஈரோடு, நாமக்கல், திருவண்ணாமலை ஆகிய 11 நாடாளுமன்றத் தொகுதிகளில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

நெல்லையில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய திமுக எம்.பி.கனிமொழி, “மத்திய அரசு கொண்டுவரும் ஒவ்வொரு மசோதாவிலும் மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படுகிறது. இந்தியா கூட்டணி வெற்றி பெறும் நாள் இந்திய நாடு வெற்றி பெறும் நாள். உத்தரபிரதேசத்தில் பாஜக 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் ஏன் அது வளர்ச்சி பெறாத மாநிலமாக இருக்கிறது என்பதற்கு பதில் சொல்ல வேண்டும்.

இந்த பிரச்சாரப் பொதுக்கூட்டம், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் INDIA கூட்டணியின் வெற்றியை முன்கூறும் உற்சாக அணிதிரல்வாக அமைந்தது. அனைத்து தரப்பு மக்களையும் வஞ்சித்து வெறுப்பை விதைக்கும் பாஜகவின் வெற்றி என்பது இந்திய ஜனநாயகத்தின் தோல்வி என்று நினைவில் கொள்வோம். பாசிசம் வீழட்டும்! INDIA வெல்லட்டும். தென்மாநிலங்கள் மத்திய அரசால் பழிவாங்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்’ என்று குற்றம் சாட்டினார்.

அடுத்து பேசிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, ’ஜி.எஸ்.,டி.யால் ரூ.20 ஆயிரம் கோடி நிதியிழப்பு தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறினார். இதேபோன்று விழுப்புரத்தில் நடந்த கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நாமக்கல்லில் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி, கடலூரில் அமைச்சர்கள் MRK பன்னீர்செல்வம், சிவசங்கர், ஈரோட்டில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டது குறித்து எடுத்துரைத்தனர்.

 தொடர்ந்து இன்று திருச்சி, திருப்பூர், அரக்கோணம், மதுரை உள்ளிட்ட 12 தொகுதிகளில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. கிருஷ்ணகிரியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனும், ராமநாதபுரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர்.

தி.மு.க. இத்தனை வேகமெடுத்தாலும் மற்ற கட்சியினரோ இன்னமும் சுணக்கமாகவே இருக்கிறார்கள். பரிதாபம் தான். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link