நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகியிருக்கும் ஐ.சி. 818 காந்தகார் ஹைஜாக் தொடரை முடக்குவதற்கு மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் எடுத்திருக்கும் நடவடிக்கை பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது.

வாஜ்பாய் அரசு ஆட்சியில் இருந்த நேரத்தில் நடந்த இந்த மாபெரும் அவமானத்தை மூடி மறைப்பதற்கு மோடி அரசு முயற்சி செய்வதாக கண்டனம் எழுந்திருக்கிறது.

இந்திய தேசத்தின் பிரதமராக பா.ஜ.க.வின் வாஜ்பாய் இருந்த நேரத்தில் கந்தகார் விமான ஹைஜாக் நடைபெற்றது. அந்த முயற்சியை முறியடிக்க முடியாமல் மேளதாளத்துடன் தீவிரவாதிகளை அனுப்பிவைத்தது அரசு. இந்த சம்பத்தை முன்வைத்து நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகி இருக்கும் ஐ.சி.814 தி கந்தகார் ஹைஜாக் தொடருக்கு  மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், சம்மன் அனுப்பியிருப்பது பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது.

இந்திய விமானத்தை கடத்திய பயங்கரவாதிகளின் பெயர்களில் போலா, சங்கர் என்ற இந்த மதப் பெயர்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக ஒரு பொய்யான குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

ஐசி-814 விமானத்தை ஹைஜாக் செய்தவர்கள் தங்கள் இஸ்லாமிய அடையாளத்தை மறைக்க போலி பெயர்களை வைத்திருந்தனர். அந்த போலி பெயர்களை இயக்குநர் அனுபவ் சின்ஹா பயன்படுத்தியுள்ளார். பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் குற்றங்களை சினிமா மூலம் மறைக்கும் நோக்கத்துடன் இந்த வெப் சீரிஸ் எடுக்கப்பட்டிருப்பதாக பாஜக நிர்வாகி அமித் மால்வியா குற்றம் சாட்டியிருக்கிறார்.

உண்மையில் இந்த தொடரில் எதுவும் மறைக்கப்படவில்லை. IC814 பைலட்டின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. விமான கடத்தல்காரர்கள் இதற்கு இந்து பெயர்களைப் பயன்படுத்தியுள்ளனர் & இது அரசாங்கப் பதிவில் உள்ளது, இதையே தொடர் சொல்கிறது.

அன்றைய பிரதமர் அடல்பிஹாரி வாய்பாய் மற்றும் தற்போதைய என்.எஸ்.ஏ.  அஜித் தோவல் செய்த தவறுகளை இந்த தொடர் இன்றைய தலைமுறைக்கு அம்பலப்படுத்தியிருக்கிறது. அதனாலே கொதித்து எழுந்திருக்கும் பா.ஜ.க. அரசு இதனை தடுத்து நிறுத்துவதற்கு முயற்சி எடுத்துள்ளது.

இந்த விவகாரம் பெரிதாகி தடை வருவதற்குள் தொடரை பார்த்திடுங்க மக்களே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link