Share via:
சீமான் கட்சியில் மாவட்ட முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக வெளியேறத்
தொடங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில் காளியம்மாளுக்கும் சீமானுக்கும் இடையிலான பஞ்சாயத்து
முடிவுக்கு வராததால், விஜய் கட்சியில் அவர் இணைய இருப்பதாக பேச்சு அடிகிறது. இதையடுத்து
நாம் தமிழர் இயக்கம் கலகலத்துப் போயிருக்கிறது.
இது குறித்துப் பேசும் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள்,
‘’காளியம்மாளை பிசிறு என்று சீமான் பேசியதை எங்கள் கட்சியினர் யாருமே ரசிக்கவில்லை.
அதன்பிறகு சீமானை காளியம்மாள் சந்தித்த பிறகும் அவர்களுக்குள் இணக்கம் வரவில்லை. காளியம்மாளை
ஒதுக்கிவிட வேண்டும் என்று சீமான் நினைக்கிறார். ஆனால், நாம் தமிழர் கட்சியில் இருந்து
வெளியேறும் எண்ணம் காளியம்மாளுக்கு இல்லை. தானாக வெளியேறுவதை விட சீமான் அனுப்பினால்
நல்லது என்று நினைக்கிறார்.
இந்த நேரத்தில் சீமான் கட்சியில் இருந்து தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகள்
பலரும் வெளியேறத் தொடங்கியிருக்கிறார்கள். கட்சிக்கு செலவழித்துக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும் கூட்டணி குறித்தும் வெற்றி குறித்தும் எந்த அறிகுறியும்
தென்படவில்லை. இப்போது விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் க.பூபாலன் கட்சியில் இருந்து
விலகியுள்ளார். இதற்கு முழு காரணமும் சீமான் தான்.
வன்னியர் ஓட்டுக்காக தர்மபுரியில் மருத்துவர் அபிநயா என்ற பெண்ணை
படிப்பை பாதியில் நிறுத்தி அழைத்து வந்து போட்டியிட வைத்தார் சீமான், அங்கு தோல்வியடைந்தார்
அபிநயா அதே அபிநயாவை மீண்டும் அபிநயாவின் சொந்த ஊரான விக்கிரவாண்டியில் நடந்த இடைத்தேர்தலில்
நிறுத்தினார் சீமான் அங்கும் அவர் தோல்வியடைந்தார்… சமீபத்தில் கட்சி கட்டமைப்பு என்று
தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார் சீமான் விழுப்புரத்தில் வைத்து மீண்டும்
அபிநயாவை விக்கிரவாண்டி தொகுதிக்கு வேட்பாளராக அறிவித்து வேலைகளை செய்யச் சொல்லி விட்டு
கிளம்பினார்,
மீண்டும் மீண்டும் அபிநயாவிற்கு வாய்ப்புகளை வழங்குவது ஏன் ? என்று
நீண்டகாலமாக கட்சி பணி செய்த பலர் கேள்வி எழுப்பியும் சீமான் உரிய பதில்களை சொல்லவில்லை,
இதனாலே அங்கிருந்த மாவட்ட செயலாளர்கள் பலர் கட்சியை விட்டு வெளியேறி இருக்கின்றனர்.
திடிரென கட்சிக்குள் வந்து இரண்டு முறை வேட்பாளராக வாய்ப்பு வாங்கி தோல்வியை தழுவிய
அபிநயாவிற்கு மீண்டும் வாய்ப்பினை சீமான் வழங்கியது நீண்ட காலமாக கட்சி வேலை செய்த
பலரை கோபமடைய செய்துள்ளது..
சமீபத்தில் நடந்த நாம் தமிழர் கட்சி உயர்நிலை பொறுப்பாளர்கள் கூட்டத்தில்
காளியம்மாள் கலந்து கொண்டார். சீமான் தன்னை முன்னிலைப்படுத்தி ஒரு கூட்டத்தில் பேசினால்
போதும் என்பது காளியம்மாள் எதிர்பார்ப்பு. ஆனால், அதற்கு சீமான் தயாராக இல்லை. ஆகவே,
வேறு வழியில்லாமல் கட்சி மாறும் முடிவை காளியம்மாள் எடுக்கும் நிலைக்கு வந்திருப்பதாகச்
சொல்கிறார்கள். காளியம்மாளை மட்டுமின்றி நாம் தமிழர் கட்சியில் 10 ஆண்டுகளுக்கும் மேல்
கடுமையாக உழைத்துவரும் நிர்வாகிகளுக்கு தி.மு.க.வினர் அழைப்பு விடுக்கிறார்கள்.
இத்தனை நாட்கள் கடுமையாக எதிர்த்த தி.மு.க.வில் எப்படி இணைவது
என்று தயங்குகிறார் காளியம்மாள். எனவே, விஜய் கட்சியின் நிர்வாகிகள் காளியம்மாளுக்கு
அழைப்பு விடுகிறார்கள். விரைவில் விஜய் கட்சியில் சேரும் முடிவு எடுத்துவிடுவார் என்கிறார்கள்.