Share via:
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 91வது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று பொன்னாடை போர்த்தி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 91வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கி.வீரமணியின் இல்லத்திற்கு நேரில் சென்று பொன்னாடை போர்த்தி புத்தகம் வழங்கி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்வின் போது அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஜெகத்ரட்சகன் எம்.பி., திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், கி.வீரமணியின் துணைவியார் வீ.மோகனா அம்மையார் மற்றும் குடும்பத்தினர் உடன் இருந்தனர்.
மேலும் அமைச்சர் மா.சுப்பிரமணியன், கி.வீரமணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்ததோடு புத்தகத்தை வழங்கினார். அதேபோல் கி.வீரமணிக்கு வி.ஜி.சந்தோஷம் உள்ளிட்டோர் பொன்னாடை போர்த்தி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.