Share via:
இன்று தேசிய அளவில்
விஜய் மனைவி சங்கீதாவுக்கு ஆதரவு தெவித்து, ‘ஜஸ்டிஸ் ஃபார் சங்கீதா’ என்ற ஹேஸ்டேக்
செம டிரெண்டிங் ஆகி வருகிறது. விஜய்க்கு எதிராக தி.மு.க.வினர், நாம் தமிழர், ரஜினி
ரசிகர்கள், அஜித் ஃபேன்ஸ் என்று ஒட்டுமொத்த கும்பலும் போட்டு புரட்டி எடுக்கிறார்கள்.
நடிகை கீர்த்தி சுரேஷுக்கும்,
அவரது நீண்ட நாள் காதலருக்கும் கோவாவில் திருமணம் நடைபெற்ற திருமணத்தில் நடிகர் விஜய்
மற்றும் த்ரிஷா ஆகியோர் ஜோடியாக பங்கேற்றனர். தனி ஃப்ளைட்டில் பறந்து சென்று ஜோடியாக
ஆசிர்வாதம் செய்தது இணையத்தில் பெரும் வைரலாகி, Justice for sangeetha என்ற ஹேஷ்டேக்கும் தேசிய அளவில்
ட்ரெண்டாகி வருகிறது.
விஜய் – த்ரிஷா தொடர்பான
கிசுகிசுக்கள் நீண்ட காலமாக இருந்துவந்தாலும் அதை பற்றி கண்டுகொள்ளாமல் லியோ படத்தின்
மூலம் இருவரும் சேர்ந்து நடித்தனர். அதேநேரம், விஜய் – சங்கீதா இடையேயான திருமண உறவு
சரியாக இல்லை என்பதும் வெளிப்படையாகத் தெரிந்தது. விஜய் கட்சி மாநாட்டில் சங்கீதா கலந்துகொள்ளவில்லை.
ஆகவே, திருமணம் என்றால்
மனைவியைக் கண்டுகொள்ளாமல் த்ரிஷாவை கூட்டிச்செல்வது என்ன நியாயம், இது தான் ரசிகர்களுக்கு
நீங்கள் சொல்லும் மெசேஜா, தனிமனித மாண்பு இல்லையா… கடலூருக்குப் போக முடியாது என்றால்
கோவாவுக்குப் போகலாமா என்றெல்லாம் வெளுத்து வாங்குகிறார்கள். இந்த விவகாரத்தில் விஜய்க்கு
எதிராக தி.மு.க.வினர் மட்டுமின்றி நாம் தமிழர் கட்சியினரும் இணைந்து தாக்குதல் நடத்துகிறார்கள்.
இதற்கு விஜய் ரசிகர்களால்
சரியான பதிலடி தர முடியவில்லை. அதனால், 25 ஆண்டுகளாக கல்யாணம் முடித்து சங்கீதாவை நல்லபடியாக
கவனித்துவருகிறார் நடிகர் விஜய். அவரது சொந்த வாழ்க்கையை இப்படி அசிங்கப்படுத்தாதீர்கள்.
சக நடிகையுடன் ஒரே விமானத்தில் பயணித்தது குற்றமா என்று மல்லுக்கட்டி வருகின்றனர்.
அரசியல்ன்னு வந்துட்டா இதெல்லாம் சாதாரணமப்பா.