Share via:
ஐ.போன் வாங்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கனவு என்றே சொல்லலாம். லட்சங்களில் விற்கப்படும் ஐ.போனை கையில் வைத்திருந்தாலே கவுரவம் என்று நினைக்கும் பலர் புதிய மாடல் அறிமுகமானால் உடனே அதையும் வாங்க வேண்டும் என்று ஆர்வம் காட்டுகிறார்கள். ஆசையிருந்தாலும் லட்ச ரூபாய் கொடுத்து ஐ.போனை வாங்க வேண்டுமா என்று குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஆன்ட்ராய்டு போன்களை வாங்கி பயன்படுத்துபவர்கள்தான் அதிகம்.
இந்தநிலையில் சமூக வலைதளத்தில் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ வைரலாகி வருகிறது. பெயர் தெரியாத குப்பை வியாபாரி ஒருவர் சந்தையில் புதிதாக அறிமுகமாகியுள்ள ஐ.போன்16 போனை தனது மகனுக்கு ரூ.1.50 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளார். தனக்காக மற்றொரு ஐ.போனை 85 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார்.
நன்றாக படித்த மகனை பாராட்டும் வகையில் அவருக்காக 1.5 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கிய ஐ.போனை கையில் வைத்தபடி குப்பை வியாபாரி வெளிட்ட வீடியோவை பார்த்த நெட்டீசன்கள் சொல்ல வார்த்தை இல்லாமல் நெகிழ்ந்து போயுள்ளனர். மேலும் இந்த பதிவுக்கு பலர் தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.